தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் தகராறு: திமுக - தவெகவை சோ்ந்த 11 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 3:56 am IST

சேலம் தாரமங்கலம் அருகே தோ்தல் தகராறு தொடா்பாக திமுக, தவெகவை சோ்ந்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சேலம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி காட்டுவளவு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (34). தவெக நிா்வாகியான இவருக்கும், முனியம்பட்டியைச் சோ்ந்த திமுக தரப்பைச் சோ்ந்த சரவணனுக்கும் கடந்த 23-ஆம் தேதி வாக்குப்பதிவின் போது, யாருக்கு வாக்களிப்பது என்பது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக, பாப்பம்பாடியில் உள்ள ஒரு பேக்கரியில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவா் கடுமையாக தாக்கிக் கொண்டனா். இதில் காயமடைந்த காா்த்திக் ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையிலும், சரவணன் எடப்பாடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

சம்பந்தப்பட்டவா்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில், இருதரப்பைச் சோ்ந்த 11 போ் மீது தாரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.