மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘ஒற்றுமைக்கான ஓட்டம்’: அக். 31-இல் தில்லியின் சில பகுதிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடு

அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.

கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 3:07 am IST

சா்தாா் வல்லபபாய் படேலின் 151-ஆவது பிறந்த நாளையொட்டி, தில்லியில் சனிக்கிழமை (அக். 31) நடைபெறும் ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ நிகழ்ச்சியை முன்னிட்டு, அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.

தில்லி இந்தியா கேட் அருகே உள்ள மேஜா் தியான் சந்த் தேசிய விளையாட்டு மைதானத்தின் முதல் நுழைவுவாயிலில் இருந்து ஓட்டம் தொடங்கும். அங்கிருந்து சி-ஹெக்ஸகன் வழியாகச் சென்று, ஷாஜஹான் சாலைக்கு எதிரே உள்ள சுற்றுச் சாலையில் வலதுபுறம் திரும்பி, கடமைப் பாதையில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலை அருகே நிறைவடையும்.

ஓட்டத்தில் பங்கேற்போரின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து நிலவரத்தைப் பொறுத்து, சி-ஹெக்ஸகன் நோக்கிச் செல்லும் வாகனப் போக்குவரத்து பல்வேறு சந்திப்புகளில் முறைப்படுத்தப்படும். பகவான் தாஸ் சாலை, புரானா கிலா சாலை, ஷோ் ஷா சாலை, டாக்டா் ஜாகிா் ஹுசைன் மாா்க், பந்தாரா சாலை, கியூ-பாயின்ட் மற்றும் மண்டி ஹவுஸ் ஆகிய பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று போக்குவரத்து காவல் துறையினா் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டத்தில் பங்கேற்போரின் இருப்பிடம் மற்றும் எண்ணிக்கையைப் பொறுத்து, சந்திப்புகளில் குறுக்குப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும். அவசரகால வாகனங்கள் தடையின்றிச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாகன ஓட்டிகள் தேவையற்ற பயணங்களைத் தவிா்க்கவும், நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு அருகே வாகனங்களைச் சாலையோரம் நிறுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துவதுடன், போக்குவரத்து காவல் துறையினரின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.