டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

பிஎம்-கிசான் திட்டத்தின் 24-வது தவணையை விடுவித்தார் பிரதமர் மோடி!

பிஎம்-கிசான் திட்டத்தின் 24-வது தவணை விடுவிக்கப்பட்டது தொடர்பாக..

பிரதமர் மோடி

Published On :30 அக்டோபர் 2026, 4:37 pm IST

குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் பிஎம்-கிசான் திட்டத்தின் 24-வது தவணையாக 9.34 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 18,690 கோடி நிதியைப் பிரதமர் மோடி விடுவித்தார்.

அகமதாபாத் - வாரணாசி விரைவு ரயில் மற்றும் மெஹ்சானா - பெச்சராஜி - சபர்தி ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி கொடியசைத்துத் துவங்கிவைத்தார்.

குஜராத்தின் பனஸ்கந்தாவிலிருந்து பிரதமர் விடுவித்த தவணைத் தொகையின் ஒரு பகுதியாக, ஒடிசாவிலுள்ள பயனாளிகளுக்கு ரூ. 3,000 கோடி வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிஎம்-கிசான் திட்டம், கோடிக்கணக்கான சிறு விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியுள்ளது.

ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, புவனேஸ்வரிலிருந்து காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, மாநில அளவிலான 'பிஎம்-கிசான் உற்சவ நிகழ்வில் பயனாளிகளான விவசாயிகளிடையே உரையாற்றினார்.

இது குறித்து அவருடைய எக்ஸ் தளப் பதிவில்,

விவசாயிகளின் நலனும் மேம்பாடும் எங்கள் அரசின் முதன்மையான கடமையாகும். இன்று, பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் பனஸ்கந்தாவிலிருந்து காணொலி வாயிலாக, நாடு தழுவிய பிஎம்-கிசான் திட்டத்தின் 24-வது தவணையை விடுவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ், நேரடிப் பணப் பரிமாற்ற முறை மூலம் மாநிலத்திலுள்ள 35.38 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நிதி உதவி நேரடியாகச் சென்றடைந்தது.

எங்களைப் பொறுத்தவரை, விவசாயி என்பவர் வெறும் பயிரிடுபவர் மட்டுமல்ல. அவர் நமக்கு உணவு வழங்குபவர். மத்திய அரசின் பிஎம்-கிசான் திட்டம், மாநில அரசின் சிஎம்-கிசான் திட்டம், குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,100 என்ற விலையில் நெல் கொள்முதல், சுபத்ரா யோஜனா, கிருஷி வித்யாநிதி கல்வி உதவித்தொகை மற்றும் பிஎம் தன்-தான்ய கிருஷி யோஜனா போன்ற முன்னெடுப்புகள், இன்று நமது கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.