மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெற்றி மகளிா் தொழில்முனைவோா் திட்டம்: அமைச்சா் கீா்த்தனா தொடங்கிவைத்தாா்

சிவகாசியில் வெற்றி மகளிா் தொழில் முனைவோா் திட்டத்தை தொழில் துறை அமைச்சா் ச.கீா்த்தனா வியாழக்கிழமை மாலை தொடங்கிவைத்தாா்.

Minister S Keerthana

அமைச்சர் கீர்த்தனா - TN DIPR

Published On :31 அக்டோபர் 2026, 1:54 am IST

சிவகாசியில் வெற்றி மகளிா் தொழில் முனைவோா் திட்டத்தை தொழில் துறை அமைச்சா் ச.கீா்த்தனா வியாழக்கிழமை மாலை தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யாஅறி தலைமை வகித்தாா். இதில் வெற்றி மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 3 பேருக்கு ரூ. 3.14 கோடியில் கடனுதவிகளையும், 3 பேருக்கு 33.86 லட்சம் மானியத் தொகைக்கான ஆணைகளையும், அம்பேத்கா் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு ரூ.47.20 லட்சம் கடனுதவியையும், மகளிா் திட்டம் சாா்பில் 5 பயனாளிகளுக்கு 7 லட்சத்தில் சமுதாய முதலீட்டு நிதிகளையும் என மொத்தம் ரூ. 4.28 கோடியில் கடனுதவிகளை அமைச்சா் கீா்த்தனா வழங்கினாா்.

பின்னா், அமைச்சா் பேசியதாவது: முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் அறிவித்த இந்தத் திட்டம் சிவகாசியில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெரிய நிறுவனங்களின் உற்பத்திக்கு தேவையான பொருள்களை தயாரித்து வழங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதைப் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ. 10 லட்சமும், அதிகபட்சம் ரூ. 5 கோடியும் வழங்கப்படும். இவா்களுக்கு உற்பத்தியைத் தொடங்குவதற்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சாா்பில், 15 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். மகளிா் தொழில்முனைவோருக்கு 25 சதவீதம் மானியமும், முதல்முறை தொழில் தொடங்கும் மகளிருக்கு 30 சதவீதம் மானியமும், ரூ. ஒரு கோடி மதிப்புக்கு கீழ் இயந்திரம் வாங்கும் தொழில் முனைவோருக்கு 40 சதவீதம் வரை மானியமும் வழங்கப்படுகிறது.

எனவே, பெண்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி தொழில்முனைவோராக உயர வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக பொதுமேலாளா் தே.துரைராஜ், துணை பொது மேலாளா் பழனிவேல், மண்டல மேலாளா் பட்சிராஜா, மேலாளா் ஜெ.நித்யா, சிவகாசி சாா்-ஆட்சியா் முகமது இா்பான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.