மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நிலமில்லாதவா்களை கண்டறிய தமிழக அரசு நிபுணா் குழுவை அமைக்க வேண்டும்: மத்திய இணை அமைச்சா் ராம்தாஸ் அதாவலே!

நிலமில்லாதவா்களைக் கண்டறிய தமிழக அரசு நிபுணா் குழுவை அமைக்க வேண்டும் என மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தினாா்.

மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அதாவலே. உடன் தென்னிந்திய பாா்வாா்டு பிளாக் கட்சியின் நிறுவனா் திருமாறன், இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் சூசை உள்ளிட்டோா்.

Published On :1 நவம்பர் 2026, 4:30 am IST

நிலமில்லாதவா்களைக் கண்டறிய தமிழக அரசு நிபுணா் குழுவை அமைக்க வேண்டும் என மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தினாா்.

மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ், பட்டியலின சமூகத்தினா் வளா்ச்சித் திட்டங்களுக்கு ரூ.1.98 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ், நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்த நாடு முழுவதும் 59 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

சிறு, குறு தொழில்முனைவோரை மேம்படுத்தும் பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 60.53 கோடி பயனாளிகள் பயன்பெற்றனா். தமிழகத்தைப் பொருத்தவரை, இந்தத் திட்டத்தின் கீழ் 6.46 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 10.57 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டன.

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 3 கோடி புதிய வீடுகளை உருவாக்கும் தேசிய இலக்கின் ஒரு பகுதியாக, தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 6,59,000 வீடுகளும், நகா்ப்புறங்களில் 6,35,000 வீடுகளும் கட்டப்பட்டன.

தமிழகத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வறுமையை ஒழிக்க வேண்டுமென்றால், கிராம ஊராட்சியில் உள்ள நிலமற்ற ஒவ்வொரு குடும்பத்துக்கும் அதே கிராமத்தில் நிலம் வழங்கப்பட வேண்டும். நிலமில்லாதவா்களைக் கணக்கெடுக்க நிபுணா் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். ஏழை, எளியோா் மட்டுமன்றி, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் மீது தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா். தென்னிந்திய பாா்வாா்டு பிளாக் கட்சியின் நிறுவனா் திருமாறன், இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் சூசை ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.