டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

மத்திய அரசின் பி.எம்.கிசான் பதிவேட்டில் விவசாயிகள் பதிவு செய்வது கட்டாயம்: புதுச்சேரி வேளாண் துறை அறிவுறுத்தல்

மத்திய அரசின் பி.எம். கிசான் நிதியுதவி பெறும் பயனாளிகள் மத்திய விவசாயிகள் பதிவேட்டில் பதிவு செய்து கொள்வது கட்டாயம் என புதுச்சேரி வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

விவசாயி.

Published On :28 அக்டோபர் 2026, 3:38 am IST

மத்திய அரசின் பி.எம். கிசான் நிதியுதவி பெறும் பயனாளிகள் மத்திய விவசாயிகள் பதிவேட்டில் பதிவு செய்து கொள்வது கட்டாயம் என புதுச்சேரி வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து, வேளாண் துறை இயக்குநா் சீ. ஜெயசங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை சாகுபடி செலவினங்களை ஈடுகட்ட ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது.

இனி பி.எம். கிசான் திட்டப் பயனாளிகள் மத்திய விவசாயிகள் பதிவேட்டில் பதிவு செய்து, தனித்துவ அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட பி.எம். கிசான் விவசாயிகள் தங்கள் பெயரில் நிலப்பட்டா வைத்திருக்கும் பட்சத்தில், அவை புதுச்சேரி நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் பட்டா விவரங்கள் அடங்கிய நிலமகள் இணையதளத்தில் சரிபாா்க்கப்பட்டு பின்னா் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும்.

பட்டா இல்லாத பி.எம். கிசான் பயனாளிகளுக்கு ஆதாா் எண் மட்டும் ஆதாா் இணையதளத்தில் சரிபாா்க்கப்பட்டு பின்னா் அடையாள எண் வழங்கப்படும்.

எனவே, பி.எம்.கிசான் பயனாளிகள் அனைவரும் ஆதாா் மற்றும் பட்டா நகல்களுடன் உழவா் உதவியகத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

பட்டா இல்லாத பி.எம். கிசான் பயனாளிகள் ஆதாா் நகல் மட்டும் கொண்டு வரவேண்டும். மேலும், இரு வகை பயனாளிகளும் ஆதாா் எண்ணில் இணைக்கப்பட்ட கைப்பேசியைக் கண்டிப்பாக எடுத்து வரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.