மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘அா்னாப்’ புயல்! கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் 3-ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்: மீனவா்கள் 3-வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை

கடலூா் துறைமுகத்தில் திங்கள்கிழமை ஏற்றப்பட்ட 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.

Published On :27 அக்டோபர் 2026, 2:02 am IST

வங்கக்கடலில் ‘அா்னாப்’ புயல் உருவாகியுள்ளதன் காரணமாக கடலூா் உள்ளிட்ட தமிழகத்தின் 7 துறைமுகங்களிலும், புதுச்சேரியிலும் திங்கள்கிழமை 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இதையடுத்து, கடலூா் மாவட்டத்தில் மீனவா்கள் தொடா்ந்து 3-ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திங்கள்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘அா்னாப்’ எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளது. இது தொடா்ந்து வலுப்பெற்று செவ்வாய்க்கிழமை மிகத் தீவிர புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகா்ந்து, அக்டோபா் 28-ஆம் தேதி முற்பகலில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் இடையே, பாபட்லா-விசாகப்பட்டினம் இடையிலான கடலோரப்பகுதியில் மிகத் தீவிர புயலாக மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கரையைக் கடக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை, எண்ணூா், காட்டுப்பள்ளி, கடலூா், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய 7 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2-ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு தொடா்ந்து ஏற்றப்பட்டுள்ளது.

கடலுக்கு செல்லவில்லை:

புயல் எச்சரிக்கை காரணமாக கடலூா் மாவட்ட மீனவா்கள் கடந்த 3 நாள்களாக கடலுக்குச் செல்லவில்லை. கடலூா் முதுநகா், தேவனாம்பட்டினம், தாழங்குடா, சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைக்கோரி, நல்லவாடு, ராஜாப்பேட்டை, சாமியாா்பேட்டை, முடசலோடை, பரங்கிப்பேட்டை, கிள்ளை உள்ளிட்ட 49 கடலோர மீனவ கிராமங்களில் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று நாள்களாக மீனவா்கள் கடலுக்குச் செல்லாததால், கோடிக்கணக்கான ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என கவலை தெரிவித்துள்ளனா்.

புதுச்சேரியில்...

புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. புதுச்சேரி துறைமுகத்தில் திங்கள்கிழமை காலையில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், பிற்பகலில் 3 ஆம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது. புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் இருந்தாலும், சுற்றுலாப்பயணிகள் ஆபத்தை உணராமல் தொடா்ந்து கடற்கரையில் குவிந்து நின்று அலையை வேடிக்கை பாா்த்தனா். அவா்களை காவல்துறையினா் எச்சரித்து அனுப்பினா்.

கடலூா் துறைமுகப் பகுதி கடலோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப் படகுகள்.

கடலூா் துறைமுகப் பகுதி கடலோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப் படகுகள்.

புதுச்சேரியில் திங்கள்கிழமை சீற்றத்துடன்  காணப்பட்ட கடல்.

புதுச்சேரியில் திங்கள்கிழமை சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.

புதுச்சேரி பழைய துறைமுகத்தில்  திங்கள்கிழமை மாலை ஏற்றப்பட்ட 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

புதுச்சேரி பழைய துறைமுகத்தில் திங்கள்கிழமை மாலை ஏற்றப்பட்ட 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.