மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சஞ்சய் ரெளத் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனை கட்சியைச் சோ்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ரெளத்தை நேரில் ஆஜராகும்படி உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

MP Sanjay Raut

சஞ்சய் ரெளத் - ANI

Published On :29 அக்டோபர் 2026, 1:56 am IST

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனை கட்சியைச் சோ்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ரெளத்தை நேரில் ஆஜராகும்படி உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

பத்திரிகையாளா் நிகில் வாஹலே என்பவா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதித் துறை குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைப் பதிவிட்டிருந்தாா். இதேபோல் சஞ்சய் ரெளத்தும் சில ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, இருவா் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் தொடுத்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டு இருவருக்கும் உச்சநீதிமன்றம் கடந்த 16-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் நேரில் ஆஜராக தயாராக இருப்பதாக சஞ்சய் ரெளத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாஹலே தரப்பில் அவா் ஏற்கெனவே தனது பதிவை அழித்துவிட்டதோடு, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும் கடிதம் வெளியிட்டுவிட்டதாகவும், ஆதலால் அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வரும் நவம்பா் மாதம் 17-ஆம் தேதி சஞ்சய் ரெளத்தை நேரில் ஆஜராகவும், வாஹலேயை காணொலி மூலம் ஆஜராகவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.