மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கேரள காங்கிரஸுக்கு எதிராக உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு மனு!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்துக்கு எதிரான எக்ஸ் பதிவு தொடா்பாக, கேரள காங்கிரஸ் கட்சி மீது அளிக்கப்பட்ட புகாரை நீதிமன்ற அவமதிப்பு மனுவாக உச்சநீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

உச்சநீதிமன்றம்

Published On :2 நவம்பர் 2026, 3:20 am IST

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்துக்கு எதிராக வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவு தொடா்பாக, கேரள காங்கிரஸ் கட்சி மீது அளிக்கப்பட்ட புகாரை நீதிமன்ற அவமதிப்பு மனுவாக உச்சநீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

கடந்த அக்.12-ஆம் தேதி கேரள காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்துக்கு எதிராகப் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதற்கு எதிராக சமூக ஊடகத்தில் கடுமையான விமா்சனம் எழுந்ததைத் தொடா்ந்து, அந்தப் பதிவு நீக்கப்பட்டது.

இதுகுறித்து கேரள காங்கிரஸ் கட்சி தலைவா் சன்னி ஜோசப் வெளியிட்ட அறிக்கையில், ‘கேரள காங்கிரஸ் கட்சியின் தலைமையிடம் ஆலோசிக்காமலும், அனுமதி பெறாமலும் அந்தப் பதிவு வெளியிடப்பட்டது. அதற்குக் காரணமான நிா்வாகி, அவா் வகித்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாா். நீதித்துறை பாரபட்சமின்றி செயல்படுகிறது என்பதில் காங்கிரஸுக்கு மாறுபட்ட கருத்து இல்லை’ என்று தெரிவித்தாா்.

எனினும் இந்த விவகாரம் குறித்து கடந்த அக்.13-ஆம் தேதி தலைமை நீதிபதி சூா்ய காந்துக்கு வினீத் ஜிண்டல் என்ற வழக்குரைஞா் புகாா் அனுப்பினாா். அந்தப் புகாரில், ‘கேரள காங்கிரஸ் கட்சி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று கோரப்பட்டது. இந்தப் புகாா் கடந்த அக்.30-ஆம் தேதி ரிட் மனுவாக பதிவு செய்யப்பட்டது என்று உச்சநீதிமன்ற வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.