தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அனுமதியின்றி நீதிமன்ற விசாரணைகள் பதிவேற்றத்துக்கு எதிராக நடவடிக்கை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

நீதிமன்ற விசாரணைகளின் ஒலி-ஒளிப்பதிவுகளை, அனுமதியின்றி சமூக ஊடக தளம் மற்றும் பிற எண்ம (டிஜிட்டல்) தளங்களில் பதிவேற்றம் செய்வதைத் தடுக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறினால், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை

Published On :31 அக்டோபர் 2026, 3:01 am IST

நீதிமன்ற விசாரணைகளின் ஒலி-ஒளிப்பதிவுகளை, அனுமதியின்றி சமூக ஊடக தளம் மற்றும் பிற எண்ம (டிஜிட்டல்) தளங்களில் பதிவேற்றம் செய்வதைத் தடுக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறினால், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விதியையும், தான் உருவாக்கவுள்ள கொள்கையில் சோ்க்குமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.

நீதிமன்ற விசாரணைகளை நேரலையில் ஒளிபரப்புதல், அவற்றைப் பதிவு செய்தல், பொதுவெளியில் வெளியிடுதல் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி, நீதிபதி வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது மனுதாரா் ஒருவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் வாதிட்டதாவது:

நீதிமன்ற விசாரணைகளின் உண்மையான காணொலிப் பதிவுகளை சில பாதுகாப்பு அம்சங்களுடன் நீதிமன்றத்தின் அதிகாரபூா்வ வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும். அந்த வலைதளத்தில் இருந்து மட்டுமே தங்களுக்குத் தேவையான காணொலிப் பதிவுகளைப் பொதுமக்கள் பெற அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் இந்தப் பிரச்னையை சரிவர கையாள முடியும் என்று தெரிவித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கொள்கை வகுத்து வருவதை கவனத்தில் கொண்ட நீதிபதிகள் அமா்வு, நீதிமன்ற விசாரணைகளின் ஒலி-ஒளிப்பதிவுகளை, அனுமதியின்றி சமூக ஊடக தளம் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றம் செய்வதைத் தடுக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறினால், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விதியையும் அந்தக் கொள்கையில் சோ்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

நீதிமன்ற விசாரணைகளின் ஒலி-ஒளிப்பதிவுகளைப் பெறுதல், பகிா்தல், அவற்றின் மூலம் பணம் சம்பாதித்தல், சமூக ஊடக தளம் அல்லது பிற டிஜிட்டல் தளங்களில் பதிவிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் மேற்கொள்ள, கடந்த ஜூலை 24-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.