மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜி20 வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்கிறாா் ஜெய்சங்கா்

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி20 அமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களின் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்கவுள்ளாா்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கா் - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 2:39 am IST

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி20 அமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களின் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்கவுள்ளாா்.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமெரிக்காவின் மியாமியில் டிசம்பா் மாதம் 14, 15-ஆம் தேதிகளில் ஜி20 அமைப்பு நாடுகளின் தலைவா்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கான திட்டங்களை இறுதி செய்வது தொடா்பாக ஆலோசிக்க வெளியுறவு அமைச்சா்களின் மாநாடு அமெரிக்காவின் அட்லாண்டாவில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இதேபோல் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாடும் நடைபெறுகிறது. இந்த இரு மாநாடுகளின் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் பங்கேற்கவுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு: இந்நிலையில், தில்லியில் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சா் மெய்ன்ஸ் ரெய்சிங்கா், வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை புதன்கிழமை சந்தித்தாா். அப்போது வா்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.