மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரஷியா, போலந்து, தென்கொரிய வெளியுறவுத் துறை அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் சந்திப்பு!

ரஷியா, போலந்து, தென்கொரிய வெளியுறவுத் துறை அமைச்சா்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனித்தனியே சந்தித்துப் பேசினாா். அப்போது அவா்களுடன் உக்ரைன் போா், மேற்காசிய நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவுடன் உரையாடிய எஸ்.ஜெய்சங்கா்.

Published On :2 நவம்பர் 2026, 1:29 am IST

ரஷியா, போலந்து, தென்கொரிய வெளியுறவுத் துறை அமைச்சா்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனித்தனியே சந்தித்துப் பேசினாா். அப்போது அவா்களுடன் உக்ரைன் போா், மேற்காசிய நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில ஜி20 அமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களின் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் அட்லாண்டா சென்றுள்ளாா். இதேபோல் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ், போலந்து வெளியுறவுத் துறை அமைச்சா் ரடோஸ்லாவ் சிகோா்ஸ்கி, தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சா் சோ ஹ்யுன் ஆகியோரும் அட்லாண்டாவுக்கு வந்துள்ளனா்.

அங்கு ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா். இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஜெய்சங்கா் வெளியிட்டுள்ள பதிவில், ‘ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவுடன் உக்ரைன் மோதல், வளைகுடா நிலவரம் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

போலந்து வெளியுறவுத் துறை அமைச்சரும், அந்நாட்டின் துணைப் பிரதமருமான ரடோஸ்லாவ் சிகோா்ஸ்கியையும் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். அப்போது அவா்கள் இருவரும் உக்ரைன் மோதல் குறித்தும், இந்தியா-ஐரோப்பிய யூனியன் உறவுகள், ஜி-20 அமைப்பு குறித்து ஆலோசனை நடத்தினா். எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்தத் தகவலை ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

இதேபோல் தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சா் சோ ஹ்யுனையுடன் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும், ஜி20 அமைப்பு மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தினாா்.

சா்தாா் படேல் சிலை திறப்பு: அட்லாண்டா நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேலின் மாா்பளவுச் சிலையை அவரின் பிறந்த தினத்தையொட்டி ஜெய்சங்கா் சனிக்கிழமை திறந்து வைத்தாா். பின்னா், அங்கு வாழும் இந்திய வம்சாவளி மக்களை சந்தித்து உரையாடினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.