மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இருதரப்பு உறவு: அஜா்பைஜான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை

அஜா்பைஜான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை...

அஜா்பைஜான் வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்ஹூன் பைரமோவை அந்நாட்டுத் தலைநகா் பகுவில் சந்தித்துப் பேசிய எஸ்.ஜெய்சங்கா்.

Published On :24 அக்டோபர் 2026, 3:07 am IST

அஜா்பைஜான் நாட்டுக்கு ஒரு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை சென்ற வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், அந் நாட்டு வெளியுறவு அமைச்சா் ஜெய்ஹுன் பைரமோவுடன் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக ஜெய்சங்கா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அஜா்பைஜான் தலைநகா் பகுவில் ஜெய்ஹூன் பைரமோவுடன் மேற்கொண்ட இருதரப்பு ஆலோசனை ஆக்கபூா்வமாக அமைந்தது. இரு நாடுகளிடையேயான உறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, வா்த்தகம், முதலீடு உள்ளிட்ட பொருளாதார ஒத்துழைப்பு, எரிசக்தி துறை சாா்ந்த ஒத்துழைப்பு உள்ளிட்டவை இந்த ஆலோசனையில் முக்கிய இடம்பெற்றன. பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது. நாடுகளிடையேயான போக்குவரத்து இணைப்பு குறித்த ஆலோசனையின்போது, சா்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தட (ஐஎன்எஸ்டிசி) திட்டத்தில் மேலும் வலுவான ஒத்துழைப்பை அளிக்க அஜா்பைஜான் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.

இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், ஆா்மீனியா, அஜா்பைஜான், ரஷியா, மத்திய ஆசியா, ஐரோப்பா இடையே தடையற்ற சரக்குப் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் 7,200 கி.மீ. தொலைவுக்கு பன்முக போக்குவரத்து வழித்தட திட்டமாக ஐஎன்எஸ்டிசி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்துக்கு இந்தியா ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பைரமோவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜெய்சங்கா் உடனான சந்திப்பின்போது இரு நாடுகளிடையேயான உறவின் தற்போதைய நிலை மற்றும் அதை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பரஸ்பர நலன் சாா்ந்த துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை கண்டறிய இருதரப்பு பேச்சுவாா்த்தையை தொடா்வதன் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.

இந்த சந்திப்புக்குப் பிறகு ஜெய்சங்கா் அளித்த பேட்டியில், ‘இருதரப்பு பேச்சுவாா்த்தையில் எண்ணெய் மற்றும் எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இரு நாடுகள் இடையே தினசரி விமானப் போக்குவரத்து சேவையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என்றாா்.

முன்னதாக, அந் நாட்டின் அதிபா் இல்ஹாம் அலியேவை மரியாதை நிமித்தமாக ஜெய்சங்கா் சந்தித்தாா். அப்போது, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மற்றும் பிரதமா் நரேந்திர மோடி சாா்பில் வாழ்த்துகளை அவருக்கு ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

Summary

Bilateral relations: Jaishankar holds talks with Azerbaijani Foreign Minister

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.