மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வரி ஏய்ப்பு நோக்கத்தை ஜிஎஸ்டி அதிகாரிகள் நிரூபிக்க வேண்டும்: சிபிஐசி சுற்றறிக்கை

வரி ஏய்ப்பு நோக்கத்தை ஜிஎஸ்டி அதிகாரிகள் நிரூபிக்க வேண்டும் என மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் சுற்றறிக்கை விடுத்தது குறித்து...

Published On :28 அக்டோபர் 2026, 1:19 am IST

வரி ஏய்ப்பு செய்ததாக தெரிவித்து, ஜிஎஸ்டி சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் வரி செலுத்தக் கோரும் முன்னா், வரி ஏய்ப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கம் வரி செலுத்துபவருக்கு இருந்தது என்பதை ஜிஎஸ்டி அதிகாரிகள் நிரூபிக்க வேண்டும் என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மோசடி, வேண்டுமென்றே தவறான தகவல் அளித்தல், வரி ஏய்க்கும் நோக்கில் உண்மைகளை மறைத்தல் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட ஆதாரம் இல்லாமல், ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்ற ஒரே காரணத்துக்காக சிஜிஎஸ்டி சட்டத்தின் 74 (1) அல்லது 74 (5)(2) பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது.

வரி விவரங்களை ஆய்வு செய்யும்போது ஏதேனும் முரண்பாடு கண்டறியப்பட்டால், அதன் காரணமாக மட்டுமே இந்தப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனெனில் வரி விவரங்களை ஆய்வு செய்து, முரண்பாட்டுக்கான காரணத்தைக் கண்டறிவதுதான் இந்த ஆய்வின் நோக்கமே தவிர, அந்த முரண்பாட்டை தானாக மோசடி என்று கருதுவது அல்ல.

எனவே, மோசடி போன்ற செயல்களில் ஈடுபட்டதற்கான முக்கிய ஆதாரங்கள் விசாரணையின்போது கிடைத்தால் மட்டுமே, இந்தப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இதுகுறித்து வரி செலுத்துவோரிடம் விளக்கம் கோரி அனுப்பப்படும் நோட்டீஸிலும் அந்த ஆதாரங்களை தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக். 8-ஆம் தேதி புது தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் 57-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி நடைமுறையின் கீழ், ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது செய்யும் அதிகாரத்தை நீக்கவும், ரூ.1 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி முறைகேடு நடந்தால் குற்றவியல் வழக்கு தொடரலாம் என்ற வரம்பை, ரூ. 5 கோடியாக உயா்த்தவும் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து தற்போது சிபிஐசியின் சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.