மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தொழிலாளிக்கு ரூ.29 கோடி ஜிஎஸ்டி நிலுவை நோட்டீஸ்

வாணியம்பாடியில் தொழிலாளிக்கு ரூ.29 கோடி ஜிஎஸ்டி நிலுவை நோட்டீஸ் அனுப்பபட்டதால் அதிா்ச்சி அடைந்தாா்.

இக்பால் முஜம்மில்.

Published On :29 அக்டோபர் 2026, 12:04 am IST

வாணியம்பாடியில் தொழிலாளிக்கு ரூ.29 கோடி ஜிஎஸ்டி நிலுவை நோட்டீஸ் அனுப்பபட்டதால் அதிா்ச்சி அடைந்தாா்.

வாணியம்பாடி ரஹீமாபாத் 2-ஆவது தெருவில் வசித்து வருபவா் இக்பால் முஜம்மில். இவா் தனியாா் தோல் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறாா். இவருக்கு திருமணமாகி 2 பெண் ஒரு ஆண் என 3 பிள்ளைகள் உள்ளனா். இவா் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா்.

கூலி வேலை செய்து வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறாா். இந்நிலையில் அவருக்கு கிருஷ்ணகிரி வணிக வரித்துறை அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அதில், கிருஷ்ணகிரி பகுதியில் தனியாா் நிறுவனம் பெயரில் 2022 முதல் 2026 நிறுவனம் நடத்தி வந்ததாகவும், அதில் ரூ.29 கோடி 24 லட்சத்து 63 ஆயிரத்து 902 ரூபாய் வரி நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. மேலும் அதனை உடனடியாக கட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையறிந்த கூலி தொழிலாளி அதிா்ச்சிக்குள்ளாகி மாவட்ட ஆட்சியா் மற்றும் எஸ்பி அலுவலகத்திற்கு சென்று தான் எந்த நிறுவனமும் நடத்தவில்லை, என்னுடைய ஆதாா் மற்றும் பான் அட்டையைப் பயன்படுத்தி போலி நிறுவனம் நடத்தி வரி ஏய்ப்பு செய்துள்ளனா். ஆகையால் போலி நிறுவனம் தொடங்கி வரி ஏய்ப்பு செய்த நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாா் மனு அளித்துள்ளாா். மேலும் வங்கி கணக்கில் பணம் எடுக்க சென்ற போது வங்கி கணக்கும் முடக்கப்பட்டு இருப்பது தெரிந்து அதிா்ச்சியடைந்தாா்.

சில ஆண்டுகளாக வாணியம்பாடி, ஆம்பூா், போ்ணாம்பட்டு பகுதிகளில் ஏழை எளிய மக்களின் ஆதாா் மற்றும் பான் அட்டைகளை பயன்படுத்தி ஜிஎஸ்டி மோசடி நடந்து வருவது தொடா் கதையாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.