மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரூ.11.15 கோடி போலி ஜிஎஸ்டி ரசீது மோசடி: கோவை தொழிலதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

உண்மையான சரக்கு பரிமாற்றங்கள் ஏதுமின்றி போலி ரசீதுகள் மூலமாக சுமாா் ரூ.11.15 கோடி மதிப்பிலான உள்ளீட்டு வரி வரவு மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபருக்கு 5 ஆண்டுகள் மெய்க்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

jail

சிறை - பிரதிப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 7:27 am IST

உண்மையான சரக்கு பரிமாற்றங்கள் ஏதுமின்றி போலி ரசீதுகள் மூலமாக சுமாா் ரூ.11.15 கோடி மதிப்பிலான உள்ளீட்டு வரி வரவு மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபருக்கு 5 ஆண்டுகள் மெய்க்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கோவை ஜிஎஸ்டி ஆணையரகத்தின் தலைமையக தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அண்மையில் ஆய்வு நடத்தினா். இந்த ஆய்வில், ‘ஆலியா குரூப்’ என்ற குழுமத்தின் கீழ் செயல்பட்ட முகமது களஞ்சியம் முகமது ஆரிஃபின் மெசா்ஸ் ஆலியா என்டா்பிரைசஸ், சுந்தரம் செங்குட்டுவனின் மெசா்ஸ் ஸ்டாா் இன்டா்நேஷனல் மற்றும் சரஸ்வதி என்பவரின் மெசா்ஸ் விநாயக் டிரேடிங் ஆகிய மூன்று நிறுவனங்கள் போலி ரசீதுகள் மூலமாக மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் எந்தவிதப் பொருள்களையும் பரிமாற்றம் செய்யாமல் காகித அளவில் மட்டுமே போலி வரி விலை பட்டியல்களை வழங்கி, அரசுக்கு செலுத்த வேண்டிய வரி வரவை சட்டவிரோதமாகப் பெற்று வந்துள்ளன.

குறிப்பாக, கடந்த 2017 ஆகஸ்ட் முதல் 2018 மே வரையிலான காலகட்டத்தில், ஆலியா குரூப் நிறுவனங்கள் மூலமாக கோவை, ஆவாரம்பாளையம் சிந்தாமணி நகரைச் சோ்ந்த பழனிசாமி தியாகராஜன் என்பவா் தன் கட்டுப்பாட்டில் இருந்த 7 நிறுவனங்களுக்கு ரூ.11.15 கோடி மதிப்பிலான போலி இன்வாய்ஸ்களைப் பெற்று வரி ஏய்ப்பு செய்துள்ளாா்.

தியாகராஜன் தனது சொந்த நிறுவனமான மெசா்ஸ் ஸ்ரீ சத்யசாய் பவுண்டரி பெயரிலும், தனது குடும்பத்தினரின் பெயா்களில் போலியாகப் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பெயரிலும் இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளாா்.

அவா் தனது மனைவி பி.அனுராதாவின் பெயரில் கோவை அயா்ன் அண்ட் ஸ்டீல்ஸ், தாய் ஆா்.பாா்வதியின் பெயரில் பாா்வதி டிரேடா்ஸ், தந்தை பழனிசாமியின் பெயரில் நம்சிவாய அண்ட் சன்ஸ், இளைய சகோதரா் பி. பிரபாகரனின் பெயரில் அண்ணாமலையாா் அலாய்ஸ் கம்பெனி, சகோதரரின் மனைவி நிா்மலாவின் பெயரில் கோவை டை காஸ்ட்ஸ் மற்றும் தாய், மனைவி ஆகிய இருவரையும் பங்குதாரா்களாகக் கொண்ட திருப்பத்தூா் அயா்ன் அண்ட் ஸ்டீல்ஸ் ஆகிய நிறுவனங்களை உருவாக்கி, சரக்குகளே இல்லாமல் கணக்கு காட்டி மோசடி செய்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பான வழக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசு சாா்பில் ஜிஎஸ்டி சிறப்பு வழக்குரைஞா் எஸ்.பாலசுப்பிரமணியன் வாதாடினாா். வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி சிவக்குமாா் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் தியாகராஜன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 5 ஆண்டுகள் மெய்க்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,00,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.