மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மத்திய பிரதேசம்: பேருந்து முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேருந்துகள் எரிந்து நாசம்!

போபாலில் பேருந்து முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து...

MP: Seven buses gutted in fire at Bhopal bus terminal; no injuries

தீப்பற்றி எரியும் பேருந்துகள்.

Published On :26 அக்டோபர் 2026, 8:59 am IST

போபாலில் பேருந்து முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேருந்துகள் எரிந்து நாசமாகின.

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 7 பேருந்துகள் சேதமடைந்தன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும் இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. முதலில் ஒரு பேருந்தில் தொடங்கிய தீ, அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற பேருந்துகளுக்கும் பரவியது.

இதில் 'வர்மா டிராவல்ஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்துகளும் அடங்கும் என்று போபால் மாநகராட்சி தீயணைப்பு அதிகாரி சௌரப் படேல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட ஏழு பேருந்துகளில், நான்கு பேருந்துகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின என்று அவர் மேலும் கூறினார்.

மாலை 7.18 மணிக்குத் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகக் குறிப்பிட்ட படேல், பரபரப்பான இந்த முனையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க எட்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், நான்கு தண்ணீர் டேங்கர் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

பேருந்து ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

Summary

At least seven empty buses were damaged in a fire at the Inter-State Bus Terminal in Bhopal on Sunday evening, an official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.