மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

1.11.1976: விரைவில் கலரில் டெலிவிஷன்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

1.11.1976 - Dinamani

Published On :1 நவம்பர் 2026, 4:30 am IST

சென்னை, அக். 31 - இந்திய டெலிவிஷன் விரைவில் "கலர் டெலிவிஷன்" ஆகும் என்று தூரதர்ஷன் டைரக்டர் ஜெனரல் பி.வி. கிருஷ்ணமூர்த்தி இன்று இங்கு தெரிவித்தார். தற்போதுள்ள கருப்பு, வெள்ளை டெலிவிஷனைக் கலர் டெலிவிஷனாக மாற்றுவதற்கு ஏற்பாடுகளும், பரிசோதனைகளும் ஏற்கெனவே நடைபெறுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

கலர் டெலிவிஷன் உலகமெங்கும் துரிதமாகப் பரவி வருவதாகவும், இந்தியா பின்தங்கி நிற்க விரும்பவில்லை என்றும் கிருஷ்ண மூர்த்தி குறிப்பிட்டார்.

கலரில் ஒளிபரப்புக்கான முதலாவது நிலையம் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. கருப்பு, வெள்ளை டெலிவிஷனுக்கு எதிர்காலம் சரியாக இல்லை. இதற்குத் துணைப் பாகங்களைப் பெறுவதே கடினம் என்ற நிலை வரலாம் என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கை அகதிகள் வாழ்வுக்கு புது அணுகுமுறை

சென்னை, அக் 31 - சுமார் 1300 இலங்கை அகதிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்க, தமிழ்நாடு மாநில பண்ணைகள் கார்ப்பொரஷன் ரூ. 48 கோடி செலவில் வகுத்துள்ள திட்டத்தினை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது என்று, மத்திய சப்ளை மற்றும் அகதிகள் புனர்வாழ்வுத்துறை துணை மந்திரி ராம் நிவாஸ் மிர்தா இன்று சென்னையில் நிருபர்களிடையே பேசுகையில் தெரிவித்தார்.

தமிழ்நாடு மாநில பண்ணைகள் கார்ப்பரேஷன் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது. இத்திட்டத்திற்கான முதலீட்டின் ஒரு பகுதியை சமாளிப்பதற்காக மாநிலப் பண்ணைகள் கார்ப்பரேஷனில் தமிழ்நாடு அரசு ரூ. 80 லட்சம் முதலீடு செய்யும். அதற்காக மத்திய அகதிகள் புனர் வாழ்வுத்துறை ரூ. 80 லட்சம் தமிழ்நாடு அரசுக்கு கடனாக அளிக்கிறது.

இத்திட்டத்திற்கு தேவைப்படக்கூடிய மிச்சத் தொகையான ரூ. 4 கோடியை விவசாய மறுநிதி வளர்ச்சி கார்ப்பரேஷனின் மறு நிதித் திட்டத்தின் கீழ் வர்த்தக பாங்குகள் அளிக்கும் என்று மிர்தா தெரிவித்தார்.

அகதிகள் புனர் வாழ்வுப் பிரச்னைக்கு புதியதொரு அணுகுமுறையை மத்திய அரசு தற்போது பின்பற்றுகிறது என்று மிர்தா அறிவித்தார்.

மத்திய, மாநிலத் திட்டங்களின் கீழான பல்வேறு வளர்ச்சி திட்டங்களில் உருவாகக்கூடிய வேலை வாய்ப்புகளை இலங்கை அகதிகளுக்கு மறுவாழ்வளிக்க பயன்படுத்துவதென்று தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இதுவரையில், மறுவாழ்வுப் பணி விசேஷத் திட்டங்களின் கீழ் மலைத்தோட்டங்கள், விவசாயம் ஆகியவற்றில் நடந்து வந்தது. ...

Summary

1.11.1976: Television in colour, coming soon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.