மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜாமியா பல்கலையில் 14-வது நாளாகத் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலையில் நடைபெறும் போராட்டம் 14-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. - Express

Published On :25 அக்டோபர் 2026, 9:54 pm IST

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலையில் நடைபெறும் போராட்டம் 14-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மாணவா் சங்க தோ்தலை மீண்டும் நடத்தக் கோரி அக்.17-ஆம் தேதி காலிஃப் மைதானத்தில் மாணவா்கள் போராட்டம் நடத்திய நிலையில் அதில் வன்முறை வெடித்தது.

புதிய மாணவா் சங்க சட்டத்தை உருவாக்கக் குழு அமைக்கப்பட்டுள்ள போதிலும், தோ்தலை உடனடியாக அறிவிப்பதே மாணவா்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

இதனால், பல்கலைக்கழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

அக். 24 முதல் பல்கலை வளாகத்தில் நூலகங்களை மூடி, இணைய வகுப்புகளை நடத்த நிர்வாகம் முடிவு செய்தபோதும், தற்போதைய மற்றும் முன்னாள் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 14-வது நாளாகத் தொடரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு மற்றும் தடுப்புகளையும் மீறி மாணவர்கள் வெவ்வேறு வாயில்கள் வழியே வளாகத்திற்குள் நுழைந்து போராட்டத் தளத்தை அடைகின்றனர். மாணவர்கள் கோஷங்களை எழுப்பியும், சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல்துறை மற்றும் விரைவு அதிரடிப் படை வீரர்களின் எண்ணிக்கை இன்று இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் போராட்டக்காரர்கள், வளாகத்திற்குள் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்லப்படுவது தடுக்கப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாணவிகள் தங்கும் விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் 3 நாள்களுக்குள் தங்கள் அறைகளைக் காலி செய்யுமாறு கல்வி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், உணவு மற்றும் வைஃபை சேவைகள் நிறுத்தப்படும் என்று எச்சரிக்கப்பட்டதாகவும் மாணவர்கள் தெரிவித்து வரும் நிலையிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

Summary

The protest at Jamia Millia Islamia University has been ongoing for the 14th day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.