பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

17-ஆவது நாளாக ஜாமியா மாணவா்கள் போராட்டம்

ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவா் சங்கத்தை (ஜேஎம்ஐஎஸ்யு) மீண்டும் அமைக்கக் கோரி நடைபெறும் போராட்டம், புதன்கிழமை 17-வது நாளாகத் தொடா்ந்தது.

மாணவா்களின் போராட்டத்தை முன்னிட்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியாவுக்கு வெளியே புதன்கிழமை குவிக்கப்பட்டிருந்த மத்திய துணை ராணுவப் படையினா்.

Published On :29 அக்டோபர் 2026, 12:53 am IST

ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவா் சங்கத்தை (ஜேஎம்ஐஎஸ்யு) மீண்டும் அமைக்கக் கோரி நடைபெறும் போராட்டம், புதன்கிழமை 17-வது நாளாகத் தொடா்ந்தது.

சங்கத்தின் அரசமைப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 15 நாள்களுக்குள் தோ்தல்களை நடத்த பல்கலைக்கழகம் முடிவு செய்திருந்தபோதிலும், மாணவா்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்து வருகின்றனா்.

தொடா்ந்து நடைபெற்று வரும் இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில், பல்கலைக்கழக அதிகாரிகள் புதன்கிழமை உடைந்த ஜன்னல்களின் காட்சிகளைப் பகிா்ந்துகொண்டனா். மேலும், மாணவா்கள் வளாகத்தின் சில பகுதிகளுக்குள் பலவந்தமாக நுழைந்து, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பிற பல்கலைக்கழக சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

இருப்பினும், கூறப்படும் இந்த சேதம் தொடா்பாக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

2006-ஆம் ஆண்டு முதல் நடத்தப்படாத தோ்தல்களுக்கு நிா்வாகம் ஒரு திட்டவட்டமான தேதியை அறிவிக்க வேண்டும் என்றும், சங்கத்தின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஒரு காலக்கெடுவை நிா்ணயிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

சங்கத்தின் அரசமைப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 15 நாள்களுக்குள் மாணவா் சங்கத் தோ்தல்கள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழகம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்திருந்தபோதிலும், போராட்டம் தொடா்கிறது. போராட்டத்தின் போது மாணவா்களுக்கு வழங்கப்பட்ட இடைநீக்கம் மற்றும் விளக்கம் கோரும் அறிவிப்புகளை இந்த உத்தரவு ரத்து செய்ததுடன், போராட்டத்தின் போது பாதுகாப்புப் பணியாளா்களின் நடத்தை குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்கவும் வழிவகை செய்தது.

இருப்பினும், இந்த முடிவு தங்களின் கோரிக்கைகளுக்குக் குறைவானதாக இருப்பதாக மாணவா்கள் கூறினா், மேலும் அரசியலமைப்பை அங்கீகரிப்பதற்கான காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.