மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக். மீனவர்கள் கைது!

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் 4 பேரை எல்லைப் பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது.

கோப்புப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 8:36 pm IST

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் 4 பேரை எல்லைப் பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் கடல் எல்லையை ஒட்டியுள்ள குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பதற்றமான சிர் க்ரீக் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீனவர்களின் படகை இடைமறித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, படகிலிருந்த மீனவர்கள் 4 பேரைக் கைது செய்து படைகையும் பறிமுதல் செய்தனர். அவர்களின் அடையாளங்கள் மற்றும் விவரங்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தச் செய்தியும் வெளியாகவில்லை.

அனுமதியின்றி எல்லை தாண்டுதல், ஊடுருவுதல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச கடல் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பதற்றமான பகுதியான சிர் க்ரீக்கை எல்லைப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இங்குள்ள சதுப்பு நிலப் பகுதி மற்றும் மாறிக்கொண்டே இருக்கும் நீர்வழிகள் காரணமாக இங்கு கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் கடினமாக உள்ளன. இதனால், பாதுகாப்புப் படையினருக்கு இப்பகுதி சவால்களை முன்வைப்பதாக உள்ளது.

இப்பகுதி வழியே பாகிஸ்தானிய மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் சாதாரணமாக நுழையும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதுபோன்ற நிகழ்வுகளில் பெரும்பாலும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களைத் தடுத்து கண்காணித்து வருகின்றனர்.

இதற்கு முன்னர், எல்லைப் பாதுகாப்புப் படையினர் இதுபோன்று அத்துமீறி நுழையும் மீனவர்களைக் கைது செய்வது மட்டுமின்றி, அங்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கைவிடப்பட்ட பல படகுகளையும் மீட்டுள்ளனர்.

Summary

Pakistani fishermen arrested for trespassing into Indian territory!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.