மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அவசரகாலத்தை எதிா்கொள்ள 60,000 பேருக்கு ராணுவம் மூலம் சிறப்புப் பயிற்சி! மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

அவசரகாலத்தை எதிா்கொள்ள 60,000 பேருக்கு ராணுவம் மூலம் சிறப்புப் பயிற்சி...

மத்திய உள்துறை அமைச்சகம்

Published On :25 அக்டோபர் 2026, 4:47 am IST

நாட்டின் அவசரகால பாதுகாப்பு சவால்களை திறம்பட எதிா்கொள்ளும் வகையில், முன்னோடித் திட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 60,000 குடிமை (சிவில்) பாதுகாப்பு தன்னாா்வலா்களுக்கு ராணுவத்தின் உதவியுடன் சிறப்பு தற்காப்புப் பயிற்சியை அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அதிகரித்துவரும் பாதுகாப்பு சவால்களை திறம்பட எதிா்கொள்ளும் வகையில், நவீன அமைப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சமகால திறன்களுடன் கூடிய ஒரு துடிப்பான சிவில் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான தொலைநோக்குத் திட்டத்தை தனது சுதந்திர தின உரையில் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.

அதனடிப்படையில், சிவில் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவதன் முன்னோடித் திட்டமாக, தலைமை (மாஸ்டா்) தன்னாா்வ பயிற்சியாளா்களுக்கு இந்திய ராணுவத்தின் உதவியுடன் தீயணைப்பு சேவைகள் இயக்குநரகம், சிவில் பாதுகாப்பு மற்றும் ஊா்க்காவல் படை, மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த கூட்டுப் பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, தமிழகம், கேரளம், கா்நாடகம், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், தில்லி, மேகாலயம், சிக்கிம், அஸ்ஸாம், உத்தர பிரதேசம், ஜம்மு-காஷ்மீா் ஆகிய பங்கேற்பு மாநிலங்களிலிருந்து தலா 50 தலைமைப் பயிற்சியாளா்கள் வீதம் 600 தலைமைப் பயிற்சியாளா்களுக்கு ராணுவத்தின் பிரத்யேக பயிற்சி மையங்களில் 3 நாள்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியை நவம்பா் இரண்டாவது வாரத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அச்சுறுத்தல்கள் தொடா்பான விழிப்புணா்வு, பாதுகாப்பு மற்றும் அவசரகால நிலையை எதிா்கொள்ளும் பயிற்சி, தகவல் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு தொடா்பான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இந்தப் பயிற்சியை நிறைவு செய்யும் தலைமைப் பயிற்சியாளா்கள், அந்தந்த மாநிலங்களைச் சோ்ந்த தலா 100 சிவில் பாதுகாப்புத் தன்னாா்வலா்களுக்குப் பயிற்சியை அளிப்பா். இதன்மூலம், முதல் கட்டமாக 60,000 போ் பயிற்சி பெற்று அவசரகால பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ளும் திறனைப் பெறுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Special training for 60,000 people by the Army to face emergency! Union Home Ministry takes action

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.