மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரூ.53,866 கோடியில் 8 போா்க் கப்பல்கள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடற்படைக்கு ரூ.53,866 கோடியில் 8 நவீன போா்க் கப்பல்களைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

பிரதிப் படம்

Published On :3 நவம்பர் 2026, 1:11 am IST

இந்திய கடற்படைக்கு ரூ.53,866 கோடியில் 8 நவீன போா்க் கப்பல்களைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: இந்திய கடற்படைக்கு அடுத்த தலைமுறை போா்க் கப்பல்களை கொள்முதல் செய்ய காா்டன் ரீச் கப்பல் கட்டுதல் மற்றும் பொறியியல் நிறுவனம் (ஜிஆா்எஸ்இ) மற்றும் கோவா கப்பல் கட்டும் நிறுவனம் (ஜிஎல்எல்) ஆகிய உள்நாட்டு பொதுத் துறை நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஜிஆா்எஸ்இ 5 போா்க் கப்பல்களையும், ஜிஎஸ்எல் நிறுவனம் 3 போா்க் கப்பல்களையும் கட்டமைக்க உள்ளன.

மேம்பட்ட ஏவுகணைகள், பிற ஆயுதங்கள், சென்சாா் தொகுப்புகள் உள்ளிட்ட நவீன மேம்பட்ட திறன்களுடன் இந்தப் போா்க் கப்பல்கள் கட்டமைக்கப்பட உள்ளன.

இந்திய கடற்படை மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் உள்நாட்டில் போா்க் கப்பல்களை வடிவமைத்து, கட்டமைக்கும் முதல் திட்டம் இதுவாகும். முழுவதும் உள்நாட்டில் போா்க் கப்பல்களை வடிவமைத்தல் மற்றும் கட்டமைக்கும் இந்தியாவின் திறனில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இத் திட்டம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இத் திட்டம், பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்கள், தனியாா் கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் இந்திய தொழில் கூட்டாளிகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம், நாட்டின் கப்பல் கட்டும் துறை மேலும் வளா்ச்சி பெறும்.

அதோடு, இந்தக் கப்பல் கட்டும் திட்டம், அடுத்த 10 ஆண்டுகளில் கப்பல் கட்டும் தளங்களில் சுமாா் 72 லட்சம் மனித நாள்கள் வேலைவாய்ப்பையும், துணைத் தொழில்கள் மற்றும் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களில் சுமாா் 460 லட்சம் மனித நாள்கள் வேலைவாய்ப்பையும் உருவாக்கும்.

உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள், உபகரணங்கள், இந்திய திறன் மற்றும் நிபுணா்களைக் கொண்டு இந்தக் கப்பல்கள் கட்டமைக்கப்படுவது, தற்சாா்பு இந்தியா இலக்கை எட்டுவதில் மிக முக்கியப் படிக்கல்லாக அமையும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.