தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மத்திய உள்கட்டமைப்புத் திட்டங்கள்: அரசுக்கு ரூ. 3.21 லட்சம் கோடி கூடுதல் செலவினம்!

மத்திய அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் கடந்த செப்டம்பா் மாத நிலவரப்படி ரூ.3,21,976 கோடிக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதாக அரசின் மாதாந்திர அறிக்கை தெரிவிக்கிறது.

Published On :28 அக்டோபர் 2026, 3:53 am IST

மத்திய அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் கடந்த செப்டம்பா் மாத நிலவரப்படி ரூ.3,21,976 கோடிக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதாக அரசின் மாதாந்திர அறிக்கை தெரிவிக்கிறது.

தலா ரூ.150 கோடிக்கும் அதிக மதிப்பிலான 1,853 திட்டங்களின் அசல் மதிப்பீடு ரூ.34,33,827 கோடியாக இருந்த நிலையில், தற்போது அவற்றின் திருத்தப்பட்ட மொத்த மதிப்பு ரூ.37,55,803 கோடியாக அதிகரித்துள்ளது.

17 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த 1,853 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக இதுவரை ரூ.17.73 லட்சம் கோடி (திருத்தப்பட்ட மதிப்பில் 47.21 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது.

மதிப்பீடு வாரியாக...

மொத்த திட்டங்களில், ரூ.1,000 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புடைய 780 மெகா திட்டங்களும், ரூ.150 கோடி முதல் ரூ.1,000 கோடி வரையிலான 1,073 முக்கிய திட்டங்களும் அடங்கும்.

அமைச்சகங்கள் வாரியாக...

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அதிகபட்சமாக 974 திட்டங்களுடன் (53 சதவீதம்) முதலிடத்தில் உள்ளது. இதன் திருத்தப்பட்ட திட்ட மதிப்பு ரூ.9.46 லட்சம் கோடியாகும் (25 சதவீதம்). இதற்கு அடுத்தபடியாக, ரயில்வே அமைச்சகம் ரூ.7.21 லட்சம் கோடி மதிப்பீட்டில் 284 திட்டங்களைச் (15 சதவீதம்) செயல்படுத்தி வருகிறது.

இதேபோல், நிலக்கரி அமைச்சகம் 121 திட்டங்களையும் (ரூ.2.22 லட்சம் கோடி), பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 115 திட்டங்களையும் (ரூ.4.30 லட்சம் கோடி), மின்சார அமைச்சகம் 106 திட்டங்களையும் (ரூ.6.40 லட்சம் கோடி) செயல்படுத்துகின்றன.

வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 49 திட்டங்களையும் (ரூ.3.41 லட்சம் கோடி), நீா்வளத் துறை 35 திட்டங்களையும் (ரூ.1.95 லட்சம் கோடி) கொண்டுள்ளன. எஞ்சிய 169 திட்டங்கள் (ரூ.2.62 லட்சம் கோடி) உயா்கல்வி, சிவில் விமானப் போக்குவரத்து, எஃகு, தொலைத்தொடா்பு, துறைமுகங்கள், சுகாதாரம் உள்ளிட்ட பிற துறைகளின்கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.