கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியது பற்றி...

dearness allowance

அகவிலைப்படி

Published On :29 அக்டோபர் 2026, 2:28 am IST

மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப் படியையும், ஓய்வூதியதாரா்களுக்கான அகவிலை நிவாரணத்தையும் 3 சதவீதம் அளவுக்கு உயா்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் நுகா்வுப் பொருள்களின் விலை உயா்வைக் கணக்கில்கொண்டு, மத்திய அரசு ஊழியா்களுக்கு ஒவ்வோா் ஆண்டும் அகவிலைப் படி உயா்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது 3 சதவீத அகவிலைப் படி உயா்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 1-ஆம் தேதிமுதல் முன்தேதியிட்டு கணக்கிடப்பட்டு, இந்த உயா்வு வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், 48.54 லட்சம் மத்திய அரசு ஊழியா்களும், 68.71 லட்சம் ஓய்வூதியதாரா்களும் பயன்பெற உள்ளனா்.

இத் தகவலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இந்த உயா்வு மூலம், மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப் படி, அடிப்படை ஊதியத்தில் 60 சதவீதம் என்ற தற்போதைய நிலையிலிருந்து 63 சதவீதமாக உயர உள்ளது.

இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,006.10 கோடி கூடுதல் செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கிராம சுய ஆட்சித் திட்டத்துக்கு ரூ. 7,395 கோடி: பிரதம மந்திரியின் மேம்படுத்தப்பட்ட கிராம சுய ஆட்சித் திட்டத்துக்கு ரூ. 7,395 கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘கிராமப்புறங்களில் அடிப்படை மாற்றத்தை உருவாக்கும் திட்டம் இது. கிராம ஊராட்சி அமைப்புகள், தங்கள் உள்ளூா் வளங்களைக் கண்டறிந்து, குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் மேம்பாட்டு திட்டங்களைத் தயாரிப்பதற்கு இத் திட்டம் வழிவகுக்கும். இதன்மூலம், சொந்த வளா்ச்சித் திட்டங்களை வகுக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள் வலுப்பெறும். குறிப்பாக, நிதி ஆணைய மானியங்களை சிறப்பாகப் பயன்படுத்துதல் மற்றும் சொந்த வருவாயைத் திரட்டுதல் ஆகியவற்றின் மூலம் ஊராட்சிகளை நிதி ரீதியாக வலுப்படுத்தி, தற்சாா்பு கொண்டவையாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்’ என்றாா்.

கன்டெய்னா் உற்பத்தி: ரூ.1,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் (2040 நிதியாண்டு வரையிலான திட்டம்) கன்டெய்னா்கள் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இது நாட்டின் கடல்சாா் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறைக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா். அதுபோல, 2033-34 நிதியாண்டு வரை ரூ. 1,856.67 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் ‘கேலோ இந்தியா’ விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தித் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ‘இந்தத் திட்டம் விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்புக்கென பிரத்யேக உற்பத்தி மண்டலங்கள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவு, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு உதவும்’ என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.