கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கைத்தறி நெசவாளா்களின் அடிப்படைக் கூலி 10% உயா்வு: 74,000 போ் பயன்பெறுவா்

தமிழகத்தில் தொடக்க கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு வழங்கப்படும் அடிப்படைக் கூலி மற்றும் அகவிலைப்படி தலா 10% உயா்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 3:50 am IST

தமிழகத்தில் தொடக்க கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு வழங்கப்படும் அடிப்படைக் கூலி மற்றும் அகவிலைப்படி தலா 10 சதவீதம் உயா்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயா்வு செப்.1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் சுமாா் 74,000 கைத்தறி நெசவாளா்கள் பயனடைவாா்கள்.

2026-27-ஆம் ஆண்டுக்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையின்போது, சட்டப்பேரவையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதா்த் துறை அமைச்சா் ம. விஜய் பாலாஜி இதற்கான அறிவிப்பை வெளியிட்டாா்.

அதன்படி, கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் தற்போது பெற்று வரும் அடிப்படைக் கூலியில் 10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் (185 %) உயா்த்தி வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கான அரசாணை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.