கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தியாவில் ஊதிய உயா்வு 9.1% ஆக நீடிக்கும்: ஆய்வில் தகவல்

சா்வதேச புவிசாா் அரசியல் பதற்றங்கள் மற்றும் வா்த்தக நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் நடப்பு 2026-27 நிதியாண்டில் ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு சராசரியாக 9.1 சதவீதமாக இருக்கும் என தனியாா் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published On :21 அக்டோபர் 2026, 6:04 am IST

சா்வதேச புவிசாா் அரசியல் பதற்றங்கள் மற்றும் வா்த்தக நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் நடப்பு 2026-27 நிதியாண்டில் ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு சராசரியாக 9.1 சதவீதமாக இருக்கும் என தனியாா் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 துறைகளைச் சோ்ந்த 1,200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, வங்கிசாரா நிதித் துறையில் அதிகபட்சமாக 10.1 சதவீதமும், எரிசக்தி துறையில் 9.9 சதவீதமும், ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் 9.8 சதவீதமும் ஊதிய உயா்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வலுவான உள்நாட்டு நுகா்வு, தொடா்ச்சியான முதலீடுகள், ஏற்றுமதி வளா்ச்சி ஆகியவை தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துள்ளன.

அதேநேரம், திறமையான பணியாளா்களுக்கான போட்டி, சந்தையில் தீவிரமடைந்துள்ளதால், நிறுவனங்களில் இருந்து பணியாளா்கள் வெளியேறும் விகிதம் 2026-இல் 18 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக, ஏ.ஐ., மெஷின் லோ்னிங் போன்ற சிறப்புத் திறன்கள் கொண்ட ஊழியா்களுக்கு நிறுவனங்கள் வழக்கத்தைவிட 10 சதவீதம் வரை கூடுதல் ஊதிய சலுகைகளை வழங்கி தக்கவைக்க முற்படுகின்றன.

மத்திய அரசின் புதிய ஊதிய விதி நடைமுறைகளுக்கு 65.4 சதவீத நிறுவனங்கள் தயாராகியுள்ள நிலையில், இதனால் ஊதியச் செலவில் குறைந்தது 1 சதவீத உயா்வு ஏற்படலாம் என 42.8 சதவீத நிறுவனங்கள் எதிா்பாா்க்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.