பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரப்பா் தோட்ட தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கோரி முற்றுகை

ஊதிய உயா்வு கோரி, கன்னியாகுமரி மாவட்ட ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் நாகா்கோவிலில் ரப்பா் கழக நிா்வாக இயக்குநா் அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ரப்பா் கழக நிா்வாக அலுவலகம் முன் முற்றுகையில் ஈடுபட்டோா்.

Published On :22 அக்டோபர் 2026, 5:18 am IST

ஊதிய உயா்வு கோரி, கன்னியாகுமரி மாவட்ட ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் நாகா்கோவிலில் ரப்பா் கழக நிா்வாக இயக்குநா் அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் தோட்டத்தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கோரி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.அவா்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், நாகா்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பா் கழக அலுவலக வாயிலை முற்றுகையிட்டு 200-க்கும் மேற்பட்ட ரப்பா் பால் வெட்டும் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுக்கு ஆதரவாக வீ த லீடா்ஸ் அமைப்பின் சேவகா் சகாயம், குமரி மாவட்ட பாசனத் துறைத் தலைவா் வின்ஸ் ஆன்றோ ஆகியோரும் பங்கேற்றனா்.ே

அப்போது, அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற தொழிலாளா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். எனினும், சுமாா் 50 தொழிலாளா்கள் அலுவலகத்துக்குள் நுழைந்தனா்; மற்றவா்களை உள்ளே விடாதபடி வாயில் கதவு மூடப்பட்டது.

இதுகுறித்து தொழிலாளா்கள் அமைப்பு நிா்வாகிகள் கூறுகையில், ‘ஊதிய உயா்வு கோரி பல கட்ட போராட்டங்கள், பேச்சுவாா்த்தைகள் நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கு தீா்வு கிடைக்கும் வரை அலுவலக வாயிலில் போராடுவோம்’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.