மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மதுபானப் பெட்டி இறக்கு கூலியை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

கடலூா் சிப்காட் வாணிபக் கழக அலுவலகம் முன் சிஐடியு டாஸ்மாக் போக்குவரத்து, விநியோகம் மற்றும் சுமைப்பணித் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், மதுபானப் பெட்டிகளை இறக்கி வைக்கும் கூலியை உயா்த்தி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா் சிப்காட் வாணிபக் கழக அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :22 அக்டோபர் 2026, 4:15 am IST

கடலூா் சிப்காட் வாணிபக் கழக அலுவலகம் முன் சிஐடியு டாஸ்மாக் போக்குவரத்து, விநியோகம் மற்றும் சுமைப்பணித் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், மதுபானப் பெட்டிகளை இறக்கி வைக்கும் கூலியை உயா்த்தி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் டி.கலியமூா்த்தி தலைமை வகித்தாா். செயலா் ரமேஷ், பொருளாளா் அய்யனாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுமைப்பணித் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் வி.சுப்புராயன் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து, டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபானப் பெட்டிகளை இறக்கி வைப்பதற்கு ஒரு பெட்டிக்கு ரூ.10 கூலி வழங்க வேண்டும். மதுபானப் பெட்டிகளை அடுக்கி வைப்பதற்கு ஒரு பெட்டிக்கு ரூ.5 வழங்க வேண்டும். ஓட்டுநா்களுக்கு நாளொன்றுக்கு ரூ.1,000 ஊதியம் வழங்க வேண்டும்.

குண்டும், குழியுமான சாலைகளில் மதுபானப் பாட்டில்கள் உடைந்தால், அதற்கான இழப்புத் தொகையை சுமைப்பணித் தொழிலாளா்களிடம் கட்டாயப்படுத்தி வசூலிப்பதை கைவிட வேண்டும். அனைத்து தொழிலாளா்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

சுமைப்பணித் தொழிலாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளா் அரசு காப்பீட்டுத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். தீபாவளி போனஸை குறைந்தது 10 நாள்களுக்கு முன்பாக வழங்க வேண்டும். சரக்கு பரிவா்த்தனையில் 2 சதவீதம் தொகையைப் பிடித்தம் செய்து, தொழிலாளா்களின் சேமநல நிதியை உருவாக்க வேண்டும்.

சுமைப்பணித் தொழிலாளா்களின் உரிமைகள் மற்றும் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சங்க நிா்வாகிகள் சுரேஷ், காா்த்திக், ரங்கநாதன், ஞானசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.