பண மோசடி வழக்கு! யாசின் மாலிக் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்த தில்லி நீதிமன்றம் உத்தரவு!
ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானிடமிருந்து நிதி பெற்றதாக குற்றச்சாட்டு பற்றி...

தில்லி நீதிமன்றம் - file photo
ஜம்மு-காஷ்ரில் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்காக ஹவாலா மூலம் பாகிஸ்தானிடமிருந்து நிதி பெற்றதாகக் கூறப்படும் பண மோசடி வழக்கில். சிறையிலுள்ள பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் உள்பட ஐந்து பேரிடம் விசாரணை நடத்த தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பண மோசடி குற்றத்தில். அவர்களின் ஈடுபாடு குறித்த வலுவான சந்தேகம் எழுப்ப போதுமான ஆதாரங்கள் பதிவில் இருப்பதைக் கண்டறிந்த நிலையில், சிறப்பு நீதிபதி பிரஷாந்த் சர்மா, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏழு குற்றவாளிகள் மீதும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
குற்றச்செயல் மூலம் கிடைத்த ரூ. 8.94 கோடியை பல்வேறு வழிகளின் மூலம் மறைக்கப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில், தடைசெய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் மாலிக், பிரிவினைவாதத் தலைவர் ஷபீர் அகமது ஷா, பாரமுல்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஷேக் அப்துல் ரஷீத், மசரத் ஆலம், ஜஹூர் அகமது ஷா வத்தாலி, நவல் கிஷோர் கபூர் மற்றும் மெஸ்ஸர்ஸ் டிரைசன் ஃபார்ம்ஸ் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் அடங்குவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரேஸ் கோா்ஸ் மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்க தில்லி உயா் நீதிமன்றம் மறுப்பு





