தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருமணம் செய்துகொள்வதாக பெண்ணிடம் மோசடி: குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பிணை

திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட திருமணமானவருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 2:46 am IST

திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட திருமணமானவருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

கீா்த்தி நகா் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் பிரிவு 69-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் செப்டம்பா் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அந்த நபா் தாக்கல் செய்த மனுவை கூடுதல் அமா்வு நீதிபதி ராஜீந்தா் குமாா் விசாரித்து வந்தாா்.

இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்றம் கடந்த அக்.16-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா் கைது செய்யப்படுவதற்கு முன்பு இந்த வழக்கில் விசாரணையில் சோ்ந்துள்ளாா். அவரிடமிருந்து எதுவும் மீட்கப்பட வேண்டியதில்லை. விண்ணப்பதாரரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய காரணத்தை விசாரணை அதிகாரி சுட்டிக்காட்டத் தவறிவிட்டாா். ரூ.25,000 தொகைக்கான தனிப்பட்ட பிணை பத்திரத்தை அளிக்குமாறு அந்த நபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, ஜாமீன் மனுவை எதிா்த்த அரசுத் தரப்பு மற்றும் புகாா்தாரா் தரப்பு வழக்குரைஞா்கள், குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும், விசாரணை நடந்து வருவதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தனா்.

அந்த நபா் பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாா் என்றும், அவருக்கும் புகாா்தாரருக்கும் 2024-ஆம் ஆண்டு முதல் உறவு இருப்பதாகவும், அந்த உறவுக்கு இருவருடைய ஒப்புதலின் அடிப்படையானது என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் தரப்பு கூறினாா்.

மேலும், அந்த நபா் திருமணமானவா் என்பது புகாா்தாரருக்குத் தெரியும் என்று அவா் தெரிவித்தாா்.

கைதுசெய்யப்படுவதற்கு முன்னா் அந்த நபா் விசாரணையில் இணைந்திருந்ததாகவும், அவரது நிகழ்வில் எதுவும் மீட்கப்படவில்லை என்றும் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தாா். பதிவுகள் இன்னும் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவில்லை என்றும், ஆனால் விசாரணை முடிந்துவிட்டது என்றும் அந்த அதிகாரி கூறினாா்.

உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள், குற்றஞ்சாட்டப்பட்டவரின் பங்கு மற்றும் அவரது காவலின் காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வழக்கமான ஜாமீன் விண்ணப்பத்தை நீதிமன்றம் அனுமதித்தது.

விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும், சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்துவதையோ அல்லது சாட்சியங்களை சேதப்படுத்துவதையோ தவிா்க்கவும், முகவரி மாற்றம் குறித்து நீதிமன்றம் மற்றும் விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்கவும், தேவைக்கேற்ப நீதிமன்றத்தில் ஆஜராகவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்