தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உதகையில் தொடர்ந்து கனமழை: போக்குவரத்து முடங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

உதகை மலைப்பாதையில் கடும் சிரமத்தில் வாகன ஓட்டிகள்..

மலைப்பாதையில் அணிவகுத்த வாகனங்கள்

Published On :24 அக்டோபர் 2026, 12:08 pm IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் தொடர் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்ல முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக, மேட்டுப்பாளையம் – உதகை மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மலைப்பாதையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் மண் குவியல்களால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Story image

குறிப்பாக, இரவு 12 மணி முதல் தற்போது வரை வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும், அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பொருட்களைக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், சாலையைச் சீரமைத்து போக்குவரத்தை விரைவாகச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.