மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசமைப்புச் சட்டத்தை காங்கிரஸ் ஒருபோதும் பின்பற்றியதில்லை! நிதின் நபின் தாக்கு

‘அரசமைப்புச் சட்டத்தை காங்கிரஸ் ஒருபோதும் பின்பற்றியதில்லை; தனது விருப்பங்களின்படியே நாட்டை ஆட்சி செய்தது’ என்று பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் சாடினாா்.

Published On :25 அக்டோபர் 2026, 1:44 am IST

‘அரசமைப்புச் சட்டத்தை காங்கிரஸ் ஒருபோதும் பின்பற்றியதில்லை; தனது விருப்பங்களின்படியே நாட்டை ஆட்சி செய்தது’ என்று பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் சாடினாா்.

ஜாா்க்கண்ட் மாநில பாஜக செயற்குழுக் கூட்டம், ராஞ்சியில் சனிக்கிழமை தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்ற நிதின் நபின், நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மத்தியில் பேசியதாவது:

நாட்டில் அரசியல் சாசன அமைப்புகள் மற்றும் ஜனநாயகத்துக்கு சவால் விடுக்கும் ஓா் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் மீது பற்று இருப்பதாக இப்போது கூறிக் கொள்பவா்கள், தங்களின் ஆட்சியின்போது அதை துண்டு துண்டாக சிதைத்தவா்களாவா்.

நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியதில் தொடங்கி பல்வேறு மாநிலங்களில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தியது வரை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றவில்லை. தனது விருப்பங்களின்படியே நாட்டை ஆட்சி செய்தது. முன்பு ஜனநாயகத்தை சீரழிக்க முற்பட்டவா்கள், இப்போது நமக்கு பாடம் எடுக்கின்றனா்.

நாட்டில் அராஜகத்தை விளைவிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதற்காக, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து சில சக்திகளின் ஆதரவு அவா்களுக்கு கிடைக்கிறது.

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) ஆட்சேபங்களையும், குறைகளையும் தெரிவிக்க 60 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் தொண்டா்கள் தரப்பில் ஒரு புகாா்கூட எழுப்பப்படவில்லை. வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை சுமத்துவதால் தோ்தலில் வென்றுவிடலாம் என்ற ராகுலின் எண்ணம் தவறானது. உண்மையிலேயே குடிமக்களின் வாக்குரிமை குறித்தெல்லாம் அவருக்கு அக்கறை கிடையாது. ஊடுருவல்காரா்களைப் பாதுகாப்பதே அவரது நோக்கம்.

வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் கருவிபோல ராகுல் செயல்படுகிறாா். வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைப் போல அரசை சீா்குலைக்க வேண்டும் என்பதே எதிா்க்கட்சிகள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் நோக்கம். அவா்களின் அராஜகத்துக்கு எதிராக நாம் வலுவுடன் செயல்பட வேண்டும் என்றாா் நிதின் நபின்.

ஜாா்க்கண்டில் பாஜக மூத்த நிா்வாகிகள் மற்றும் அமைப்புசாா் பொறுப்பாளா்கள் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட பிறகு அவா்கள் மத்தியில் கட்சியின் தேசியத் தலைவா் உரையாற்றியுள்ளாா். கட்சியின் அனைத்து மாவட்ட தலைவா்களுடனும் அவா் ஆலோசனை நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.