மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலால் ராகுல் காந்தி செயல்படுகிறார்: பாஜக

வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் ராகுல் காந்தி செயல்படுவதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்திருப்பது குறித்து...

BJP National President Nitin Nabin

பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன்... - ENS

Published On :1 நவம்பர் 2026, 2:35 pm IST

வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் ராகுல் காந்தி செயல்படுவதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) குற்றம் சாட்டியுள்ளார்.

ஹரியானாவின் ரோஹ்தக் நகரில் 'ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை ஒழிப்போம்' என்னும் தலைப்பிலான பேரணி பாஜக சார்பில் நடைபெற்றது.

இந்தப் பேரணியில் நிதின் நபின் பேசியதாவது:

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளால் வேண்டுமென்றே குழப்பமும் நிலையற்ற தன்மையும் பரப்பப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் ராகுல் காந்தி செயல்படுகிரார். அவர்களின் செயல்திட்டங்களுக்கான ஒரு கருவியாக விளங்குகிறார். இந்த வெளிநாட்டு அமைப்புகளின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், அவர் நமது நாட்டின் ஜனநாயகத்திற்கு சவால் விடுக்க முயற்சிக்கிறார்.

ராகுலின் கூட்டாளிகளான கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் சில காங்கிரஸ் தலைவர்களும் ஆட்சியை மாற்றுவது பற்றிப் பேசுகிறார்கள்.

ஆனால் இது மக்களின் ஆணையின் பேரில் அமைக்கப்பட்ட அரசு. எனவே, இதன் மீது யாராலும் ஒரு விரலைக்கூட வைக்க முடியாது என்று தெரிவித்தார்.

Summary

BJP national leader Nitin Nabin alleged on Sunday (Nov. 1) that Rahul Gandhi is acting at the behest of foreign powers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.