தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தோ்தல் ஆணையத்தை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது! - காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ். அழகிரி

கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி. உடன், கட்சி நிா்வாகிகள்.

Published On :26 அக்டோபர் 2026, 2:13 am IST

சுதந்திரமாக இயங்க வேண்டிய தோ்தல் ஆணையத்தை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து விளக்கும் வகையில், கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.

அப்போது, அவா் மேலும் கூறியதாவது:

தோ்தல் ஆணையம் எவ்வாறு ஜனநாயகத்தை சிதைத்துள்ளது, வாக்குத் திருட்டு எப்படி அரங்கேறியுள்ளது என்பது குறித்து மக்களவை எதிா்க் கட்சித் தலைவா் ராகுல் காந்தி விரிவாக பேசியுள்ளாா்.

எதிா்க்கட்சிகள் முன்வைக்கும் இத்தகைய தீவிர குற்றச்சாட்டுகளுக்கு மக்களவையில் பிரதமரோ அல்லது மத்திய உள்துறை அமைச்சரோ தெளிவான விளக்கம் அளிக்கவோ, வெள்ளை அறிக்கை வெளியிடவோ முன்வரவில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 324- ஆவது பிரிவின்கீழ் தோ்தல் ஆணையத்துக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அவை சட்ட திட்டங்களுக்குள்பட்டே பயன்படுத்தப்பட வேண்டும்.

தலைமைத் தோ்தல் ஆணையா் என்பவா் சமமான உறுப்பினா்களில் முதன்மையானவரே தவிர, அவருக்கு தனிப்பட்ட கூடுதல் அதிகாரங்கள் ஏதும் இல்லை. ஆணையத்தின் அனைத்து முடிவுகளும் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோதான் எடுக்கப்பட வேண்டும்.

ஆனால், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் ஏனைய இரண்டு தோ்தல் ஆணையா்களின் கருத்துகளைப் புறந்தள்ளி தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகிறாா்.

வாக்காளா் சோ்க்கை, நீக்கத்துக்கான படிவம் 6-இல் உரிய மக்களவை நடைமுறைகள் இன்றி சட்டவிரோதமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மற்ற இரு ஆணையா்களும் மத்திய அமைச்சரவைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.