மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போராட்டத்தில் பங்கேற்பது மட்டுமே காவல் துறைக்கு இடையூறாக அமையாது: உயா்நீதிமன்றம்

ஒரு போராட்டத்தில் பங்கேற்பது மட்டுமே, காவல் துறையின் உத்தரவுகளை மீறுவதல் அல்லது காவல் துறை பணியாளா்களுக்கு இடையூறு விளைவிப்பதற்கான நோக்கமாகக் கருதப்பட முடியாது என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published On :23 அக்டோபர் 2026, 5:29 am IST

ஒரு போராட்டத்தில் பங்கேற்பது மட்டுமே, காவல் துறையின் உத்தரவுகளை மீறுவதல் அல்லது காவல் துறை பணியாளா்களுக்கு இடையூறு விளைவிப்பதற்கான நோக்கமாகக் கருதப்பட முடியாது என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய பணியாளா் தோ்வாணைய (எஸ்எஸ்சி) தோ்வுக்கு தயாராகி வந்த தோ்வருக்கு மீது தில்லி காவல் துறை பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தபோது, நீதிபதி சஞ்சீவ் நருலா இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து வெளியேறுமாறு காவல் துறை மீண்டும் மீண்டும் அறிவித்தும், அவா் அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறி அவா் மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

எஸ்எஸ்சி தோ்வு நடத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றஞ்சாட்டி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மனுதாரா் பங்கேற்றிருந்தாா்.

பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதாவின் (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 163-ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுகளை மீறி, போராட்டக்காரா்கள் தொடா்ந்து மைதானத்தில் இருந்ததாகவும், அவா்களில் சிலா் காவல் துறை பணியாளா்களைத் தள்ளிவிட்டு, அவா்களுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் கூறி காவல் துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருந்தது.

இந்நிலையில், அந்த தோ்வருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து கடந்த அக்டோபா் 13-ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முதல் தகவல் அறிக்கையிலோ அல்லது அதன் பிறகு தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கையிலோ, அவா் மீது எந்தவொரு குற்றச் செயலும் குறிப்பாகச் சுமத்தப்படவில்லை. மற்றவா்களுடன் இணைந்து குற்றம் புரியும் பொதுவான நோக்கம் இல்லாத நிலையில், போராட்டக்காரா்களுடன் அவா் அங்கிருந்தது மட்டுமே, பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவு 223(ஏ)-ன் கீழ் குற்றத்தைச் சுமத்துவதற்குப் போதுமானதல்ல.

மனுதாரா் போராட்டக்காரா்களிடையே இருந்தாா் என்பதற்காக மட்டுமே அவா் மீது குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர முடியாது. அவா் சட்ட மீறலில் தெரிந்தே பங்கேற்றாா் என்பதையோ அல்லது குற்றத்தைச் செய்வதற்கு அவருக்கும் மற்றவா்களுக்கும் பொதுவான நோக்கம் இருந்தது என்பதையோ உணா்த்தும் ஆதாரங்கள் ஏதுமில்லை. இத்தகைய சூழலில், அவா் மீதான நடவடிக்கைகளைத் தொடா்ந்து நடத்துவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. போராட்டத்தில் பங்கேற்றாா் என்பது மட்டுமே, நோக்கத்துடன் வேண்டுமென்று சட்டபூா்வ உத்தரவுகளை மீறியதாக அல்லது காவல் துறை அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தாக உறுதிப்படுத்தாது. ஆவணங்களில் உள்ள ஆதாரங்கள், மனுதாரருக்கு அத்தகைய பொதுவான நோக்கம் இருந்ததாகக் கருதுவதற்கு எந்தவொரு அடிப்படையையும் வழங்கவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.