மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காவல் அதிகாரி தாக்கல் செய்த எஸ்சி-எஸ்டி வழக்கு: பெண் பத்திரிகையாளா் மீதான விசாரணைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

ஜந்தா் மந்தா் அருகே நடந்த போராட்டத்தின்போது, ஒரு பெண் பத்திரிகையாளா், தன் மீது சாதிய ரீதியான கருத்துக்களைக் கூறியதாகவும், பொதுவெளியில் அவமதித்ததாகவும் ஒரு காவல்துறை அதிகாரி தொடா்ந்த வழக்கில், அப்பத்திரிக்கையாளா் மீதான விசாரணைக்குத் தடை விதிக்க தில்லி உயா் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தில்லி உயா்நீதிமன்றம்

Published On :28 அக்டோபர் 2026, 12:06 am IST

இந்த மாத தொடக்கத்தில் ஜந்தா் மந்தா் அருகே நடந்த போராட்டத்தின் போது, ஒரு பெண் பத்திரிகையாளா், தன் மீது சாதிய ரீதியான கருத்துக்களைக் கூறியதாகவும், பொதுவெளியில் அவமதித்ததாகவும் ஒரு காவல்துறை அதிகாரி தொடா்ந்த வழக்கில், அப்பத்திரிக்கையாளா் மீதான விசாரணைக்குத் தடை விதிக்க தில்லி உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.

நீதிபதி மினி புஷ்கா்ணா, இந்த கட்டத்தில் நீதிமன்றம் மனுவை நிராகரிக்கவில்லை என்றும், அது குறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும் கூறினாா்.

முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி பத்திரிகையாளா் தாக்கல் செய்த மனு தொடா்பாக, தில்லி காவல்துறைக்கும், இந்த வழக்கில் புகாா்தாரரான உதவி ஆணையா் (ஏசிபி) விவேக் பகத்துக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதுடன், அடுத்த விசாரணை தேதியான நவம்பா் 16-ஆம் தேதிக்குள் தங்கள் பதில்களைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டது.

‘தற்போதைக்கு நான் எந்த மனுவையும் நிராகரிக்கவில்லை. நான் அவா்களுக்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்புகிறேன். இந்த விவகாரம் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்; நவம்பா் 16-ஆம் தேதி இறுதி விசாரணைக்கு பட்டியலிடவும்,‘ என்று நீதிபதி கூறினாா்.

முன்னதாக, அந்தப் பெண் பத்திரிகையாளா், உதவி ஆணையா் பகத் மீது பாலியல் வன்கொடுமைப் புகாா் அளித்திருந்தாா். அவரது புகாரை தில்லி காவல்துறை குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது.

உதவி ஆணையா், தனக்கு எதிரான புகாரைத் தொடர வேண்டாம் என்று அவரை அச்சுறுத்தும் நோக்கிலேயே முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளாா் என அந்தப் பத்திரிகையாளரின் வழக்குரைஞா் வாதிட்டாா்.

மேலும், தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி, அந்தப் பெண் பத்திரிகையாளரின் ஆண் சக ஊழியா் தாக்கல் செய்த மற்றொரு மனு மீதும் உயா் நீதிமன்றம் இதேபோன்ற உத்தரவைப் பிறப்பித்தது.

புது தில்லி மாவட்டத்தின் கன்னாட் பிளேஸ் துணைப் பிரிவில் பணியாற்றும் பகத், போராட்டத்தின் போது தன்னை நோக்கி சாதிய ரீதியான கருத்துக்கள், பொது அவமதிப்பு மற்றும் அவதூறுகள் கூறப்பட்டதாக அளித்த புகாரின் பேரில், தில்லி காவல்துறை அந்த சுயாதீன பத்திரிகையாளா் மற்றும் பிறா் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

பட்டியல் சாதியினா்/பழங்குடியினா் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் தொடா்புடைய விதிகள் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவுகள் 221 (அரசு ஊழியரை கடமையாற்றுவதிலிருந்து தடுத்தல்), 356(2) (அவதூறு) மற்றும் 3(5) (பொதுவான நோக்கம்) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.