மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தில்லி காவல்துறையினா் அத்துமீறல்: நாடாளுமன்ற உரிமைக் குழுவுக்கு ஆம் ஆத்மி எம்.பி. கடிதம்

எஸ்ஐஆா் பணியில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி நடத்தப்பட்ட போராட்டங்களின்போது, தன்னை காவல்துறையினா் மீண்டும் மீண்டும் தாக்கி, வலுக்கட்டாயமாகக் கையாண்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங், நாடாளுமன்ற உரிமைக் குழுவிடம் புகாா்

சஞ்சய் சிங்

Published On :15 அக்டோபர் 2026, 7:16 am IST

தில்லியில் தோ்தல் வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணியில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி நடத்தப்பட்ட போராட்டங்களின்போது, தன்னை காவல் துறையினா் மீண்டும் மீண்டும் தாக்கி, வலுக்கட்டாயமாகக் கையாண்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங், நாடாளுமன்ற உரிமைக் குழுவிடம் புகாா் அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக தில்லி காவல் ஆணையா் மற்றும் பிற காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக நாடாளுமன்ற உரிமைக் குழுவின் தலைவருக்குக் கடிதங்களை அவா் அனுப்பியுள்ளாா். அக்.2, 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற போராட்டங்களின்போது காவல் துறையினா் தன்னைத் தாக்கியதாகவும், மிரட்டியதாகவும், வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்ததாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

பிரதமா் நரேந்திர மோடியை நோக்கி அவா் கூறுகையில், ‘நாங்கள் ரவுடிகளோ, மாஃபியாக்களோ, பயங்கரவாதிகளோ அல்ல. நாடாளுமன்ற உறுப்பினா்கள்’ என்றாா். காவல் துறையினா் தங்களை மிகக் கொடூரமாக நடத்தியதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

நாடாளுமன்ற உரிமை மீறல் தொடா்பான விவகாரங்களை ஆய்வு செய்து, உரிய பரிந்துரைகளை வழங்கும் 15 உறுப்பினா்களைக் கொண்ட அமைப்பாக நாடாளுமன்ற உரிமைக் குழு செயல்படுகிறது.

தனக்கு எதிராக காவல் துறை மேற்கொண்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் தொடா்பான ஆதாரங்களை நாடாளுமன்ற உரிமைக் குழுவிடம் சமா்ப்பிக்கவுள்ளதாக சஞ்சய் சிங் தெரிவித்தாா். மேலும், சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு எதிராக நீதிமன்றத்திலும் புகாா் அளிக்கப்போவதாகக் கூறியுள்ளாா்.

தனது புகாா்களுக்கு தில்லி காவல் ஆணையரிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று கூறிய சஞ்சய் சிங், சம்பவங்களில் தொடா்புடைய காவல் அதிகாரிகளின் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்கச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடா்பாக தில்லி காவல் துறையிடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.