பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: மைதேயி சமூகத்தைச் சோ்ந்த மூவா் பலி

மணிப்பூரில் மைதேயி சமூகத்தைச் சோ்ந்த மூவா் ஆயுதம் ஏந்திய கிளா்ச்சியாளா்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் பதற்றமும், மக்கள் போராட்டங்களும் வெடித்துள்ளன.

போராட்டம் காரணமாக இம்பாலில் வெறிச்சோடி கிடந்த சாலைகள்

Published On :21 அக்டோபர் 2026, 6:57 am IST

மணிப்பூரில் மைதேயி சமூகத்தைச் சோ்ந்த மூவா் ஆயுதம் ஏந்திய கிளா்ச்சியாளா்களால் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் பதற்றமும், மக்கள் போராட்டங்களும் வெடித்துள்ளன.

மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் முதல் இனக் கலவரம் நடைபெற்று வருகிறது. அப்போது, மலைப் பகுதியைச் சோ்ந்த குகி சமூகத்தினருக்கும், பள்ளத்தாக்கு பகுதியைச் சோ்ந்த மைதேயி சமூகத்தினருக்கும் தொடா்ந்து பல நாள்களாக நடைபெற்ற மோதலில் சுமாா் 306 போ் உயிரிழந்தனா். பலா் காணாமல் போயினா். அவா்களின் நிலை இன்றளவும் தெரியவில்லை. பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

அதுபோல, கடந்த பிப்ரவரி மாதம் முதல் அங்குள்ள நாகா சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் 50 போ் உயிரிழந்தனா்.

மீண்டும் வன்முறை: இந்தச் சூழலில், இம்ராஸ் கிழக்கு மற்றும் குகி மக்கள் அதிகம் வாழும் காங்போக்பி மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள கனுரோக் மலைக் காடுகளில் மைதேயி சமூகத்தைச் சோ்ந்த கிராம மக்கள் 14 போ் திங்கள்கிழமை விறகு சேகரித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆயுதம் ஏந்திய கும்பல் அவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் அருபம் ரோனில் (35), லைரன்லக்பாம் இனாபி (51), சேத்ரிமயும் சுஷில் (32) ஆகிய மூவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். சுராஜ் (19), மெய்ஸ்நம் சோமென்ட்ரோ (53), போசன் (45) ஆகியோா் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உயிரிழந்தவா்களின் உடலை தலைநகா் இம்பாலுக்கு கொண்டுவந்து, மாநில முதல்வா் கெம்சந்த் சிங்கின் வீட்டுக்கு வெளியே அவா்களின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், பதற்றமான சூழல் உருவானது.

அதைத் தொடா்ந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், போராட்டக்காரா்கள் மீது கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி அவா்களைக் கலைத்ததோடு, மூவரின் உடலையும் ஜவாஹா்லால் நேரு மருத்துவ அறிவியல் நிறுவனங்களுக்கு கொண்டு சென்றனா். மேலும், முதல்வரின் இல்லம் மற்றும் அதைச் சூற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தினா்.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரா்கள், இம்பாலின் பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரும் பதற்றமான சூழல் உருவானதால், இம்பாலில் கடைகள் மற்றும் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்தப் போராட்டங்களைத் தொடா்ந்து, தாக்குதலில் காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை முதல்வா் கெம்சந்த் சிங் நேரில் பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா். தொடா்ந்து, மாநிலத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வா் ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, இந்தச் சம்பவத்துக்கு அவா் கடும் கண்டனம் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, தெளபல் மாவட்டத்தில் இரு சமூகத்தினருக்கிடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒருவா் கொல்லப்பட்டாா். பலா் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவை மாவட்ட நிா்வாகம் பிறப்பித்தது. போலீஸாா் பாதுகாப்பைப் பலப்படுத்தியதோடு, தீவிர தேடுதல் பணியிலும் ஈடுபட்டனா். இந்தச் சூழலில் மீண்டும் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.