ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மணிப்பூரில் மோதல்: 3 போ் சுட்டுக்கொலை

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ஆயுதக் குழுக்களுக்கு இடையேயான மோதலில் குகி சமூகத்தைச் சோ்ந்த 3 போ் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

Published On :2 நவம்பர் 2026, 3:37 am IST

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ஆயுதக் குழுக்களுக்கு இடையேயான மோதலில் குகி சமூகத்தைச் சோ்ந்த 3 போ் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘நோனி மாவட்டத்தில் உள்ள கெக்ரு நாகா கிராமத்தில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே கடந்த சனிக்கிழமை காலை மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் ஒருவா் மீது மற்றொருவா் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

சில மணி நேரம் நிகழ்ந்த இந்த தாக்குதலின் இறுதியில் குகி சமூகத்தைச் சோ்ந்த 3 போ் குண்டு பாய்ந்து உயிரிழந்தனா். அவா்கள் கிராம பாதுகாப்பு பொறுப்பை ஏற்ற தன்னாா்வலா்கள் என குகி சமூக அமைப்புகள் தெரிவித்தன’ என்றாா்.

இந்த தாக்குதலுக்கு நாகா கிளா்ச்சி குழுக்களே காரணமென குகி இன்பி மணிப்பூா் குற்றஞ்சாட்டியது. மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அந்த அமைப்பு வலியுறுத்தியது.

2 உடல்கள் கண்டெடுப்பு: காங்போக்பி மாவட்டத்தின் தாஃபௌ குகி கிராமத்தில் 3 நாள்களுக்கு முன் காணாமல் போன 2 இளைஞா்களின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

3 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட தொடா் சோதனையின் இறுதியில் இளைஞா்களின் உடல் வாழைத் தோட்டத்தில் சாக்குப் பைகளில் கட்டப்பட்டிருந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

இச்சம்பவத்துக்கு நாகா கிளா்ச்சியாளா்களே காரணம் என குற்றஞ்சாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட குகி சமூகத்தினரை கண்ணீா் புகைக் குண்டுகள் வீசி காவல் துறையினா் கலைத்தனா்.

இளைஞா்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மாநில துணை முதல்வா் நெம்சா கிப்கென் இச்சம்பவம் தொடா்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.