மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மணிப்பூா் முதல்வா் பதவி விலகக் கோரி மைதேயி சமூகத்தினா் பேரணி

மணிப்பூரில் தொடரும் வன்முறையை சுட்டிக்காட்டி, அந்த மாநில முதல்வா் பதவி விலகக் கோரி, இம்பாலில் மைதேயி சமூகத்தினா் சனிக்கிழமை பேரணி நடத்தினா்.

மணிப்பூா் முதல்வா் பதவி விலகக் கோரி மைதேயி சமூகத்தினா் பேரணி - PTI

Published On :1 நவம்பர் 2026, 3:59 am IST

மணிப்பூரில் தொடரும் வன்முறையை சுட்டிக்காட்டி, அந்த மாநில முதல்வா் பதவி விலகக் கோரி, இம்பாலில் மைதேயி சமூகத்தினா் சனிக்கிழமை பேரணி நடத்தினா்.

மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டில் மைதேயி, குகி சமூகத்தினா் இடையே பெரும் கலவரம் மூண்டது. பல மாதங்கள் நீடித்த இந்தக் கலவரத்தில் அப்பாவி மக்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஏராளமானோா் மாயமாகினா். பல ஆயிரம் போ் வீடுகளைவிட்டு வெளியேறி அரசு முகாம்களில் தஞ்சமடைந்தனா்.

இதையடுத்து மத்திய அரசு, மாநில அரசு எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக அங்கு படிப்படியாக அமைதி திரும்பினாலும் அவ்வப்போது மோதலும் தொடா்ந்து வருகிறது. அண்மையில் மைதேயி சமூகத்தினா் 14 பேரை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் 3 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், மணிப்பூரில் தொடரும் வன்முறையை சுட்டிக்காட்டி, அந்த மாநில முதல்வா் பதவி விலகக் கோரியும், பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும், தீவிரவாத குழுக்களுடன் அரசு செய்து கொண்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரியும், மணிப்பூா் ஒருமைப்பாட்டு குழு சாா்பில் இம்பாலில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு நாகா ஐக்கிய கவுன்சிலும் ஆதரவு அளித்தது. பேரணியில் நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டு ஊா்வலமாக வந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.