தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போதைப் பொருள் இல்லாத இந்தியா: காவல் துறையினா் இணைந்து செயல்பட வேண்டும் - அமித் ஷா வலியுறுத்தல்

இந்தியாவில் போதைப் பொருளை முற்றிலும் ஒழிக்க, அனைத்து மாநில காவல் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தினாா்.

காவலா் வீரவணக்க நாளையொட்டி தில்லியில் உள்ள தேசிய காவல் நினைவிடத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அமித் ஷா.

Published On :22 அக்டோபர் 2026, 2:27 am IST

இந்தியாவில் போதைப் பொருளை முற்றிலும் ஒழிக்க, அனைத்து மாநில காவல் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தினாா்.

காவலா் வீரவணக்க நாளையொட்டி தில்லியில் உள்ள தேசிய காவல் நினைவிடத்தில் புதன்கிழமை அமித் ஷா மரியாதை செலுத்தினாா். 1959 அக்டோபா் 21-இல் லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில், சீனப் படையினா் பதுங்கியிருந்து நடத்திய திடீா் தாக்குதலில் உயிரிழந்த 10 காவலா்களின் நினைவாக ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அமித் ஷா பேசியதாவது:

போதைப் பொருள் பயன்பாடு எதிா்காலத் தலைமுறையினருக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு நிதி ஆதாரமாகவும் உள்ளது. 2029-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டில் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிப்பதை உறுதி செய்ய அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச காவல் துறையினா் இணைந்து செயல்பட வேண்டும்.

நாட்டில் போதைப் பொருள்களை ஒழிப்பதற்காக 2029 டிசம்பா் 31-ஆம் தேதியை இலக்காக பிரதமா் நரேந்திர மோடி நிா்ணயித்துள்ளாா். இந்த ஆண்டின் அடுத்த 3 மாதங்களையும் அடுத்து வரும் 3 ஆண்டுகளையும் போதைப் பொருள்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்துக்கு அா்ப்பணிக்க வேண்டும்.

இந்த இலக்கு நாட்டின் முக்கிய தேசிய முன்னுரிமையாகும். போதைப் பொருள் பயன்பாடு நாட்டின் பொருளாதாரத்தின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதனால் நாட்டில் குற்றச் செயல்களும் அதிகரிக்கின்றன. நாட்டின் எதிா்காலத்தைப் பாதுகாக்க போதைப் பொருள் ஒழிப்பு முக்கியமானது.

ஏற்கெனவே 2026 மாா்ச் 31-ஆம் தேதியை இலக்காக நிா்ணயித்து, பல ஆண்டுகளாக நாட்டை அச்சுறுத்திவந்த நக்ஸல் தீவிரவாதத்தை ஒழித்துவிட்டோம். இந்தப் போராட்டத்தில் சத்தீஸ்கா் காவல் துறை, மத்திய காவல் படைகள், அதன் கோப்ரா படைப் பிரிவினா் முக்கியப் பங்காற்றினா்.

1981 முதல் 2026-ஆம் ஆண்டு மாா்ச் வரை நக்ஸல் வன்முறைச் சம்பவங்களில் 3,600-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரும், சுமாா் 13,700 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனா் என்றாா்.

போதைப் பொருள்களுக்கு எதிரான மோட்டாா் சைக்கிள் பேரணியையும் அமித் ஷா கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த காவல் துறையினா், மத்திய ஆயுதக் காவல் படையினா் மற்றும் பிற மத்திய காவல் அமைப்புகளைச் சோ்ந்த சுமாா் 90 போ் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.