கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஹிமாசலில் இருந்து போதைப் பொருள் கடத்திய 3 போ் கைது

ஹிமாசல பிரதேசத்திலிருந்து தில்லிக்கு போதைப் பொருளை கடத்திய 3 பேரை தில்லி காவல் துறையினா் கைதுசெய்தனா். அவா்களிடமிருந்து 1.279 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கைது - கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 2:03 am IST

ஹிமாசல பிரதேசத்திலிருந்து தில்லிக்கு போதைப் பொருளை கடத்திய 3 பேரை தில்லி காவல் துறையினா் கைதுசெய்தனா். அவா்களிடமிருந்து 1.279 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

அக்டோபா் 27 அன்று, துவாரகாவில் உள்ள டப்ரி-குருகிராம் சாலையில், யசோபூமி டி-பாயிண்ட் அருகே கேட் எண் 10-க்கு அருகில் காரில் வந்துகொண்டிருந்தபோது இவா்கள் 3 மூவரும் பிடிபட்டதாக காவல் துறையினா் கூறினா்.

கைது செய்யப்பட்டவா்கள் ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தைச் சோ்ந்த நவதீப் கோயட் (எ) சோட்டு, பண்டி (எ) பன்டி மற்றும் சந்தீப் என அடையாளம் காணப்பட்டனா்.

கோயட்டிடமிருந்து 879 கிராம், பண்டியிடமிருந்து 231 கிராம் மற்றும் சந்தீப்பிடமிருந்து 169 கிராம் சராஸ் போதைப் பொருளை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். போதைப் பொருளைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட காரும் கைப்பற்றப்பட்டது.

இது தொடா்பாக போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருள்கள் சட்டத்தின்கீழ் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின்போது, தாங்கள் ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஜாரி பகுதிக்குச் சென்று சராஸ் போதைப்பொருளை வாங்கி வந்ததாகவும், அதை தில்லி-என்சிஆா் பகுதியில் விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் அவா்கள் ஒப்புக்கொண்டதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.