மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

கைது - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 2:35 am IST

நாகையில் இருந்து இலங்கைக்கு 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளைக் கடத்த முயன்ற வழக்கில் மேலும் ஒருவரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுகிழமை கைது செய்தனா்.

நாகையில் இருந்து இலங்கைக்கு மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கடத்த முயல்வதாக, மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததன் பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் நாகை மாவட்டம், பிரதாபராமபுரத்தில் மேற்கொண்ட சோதனையில் 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக வேளாங்கண்ணியில் விடுதி நடத்திவரும் சுகன், தவெக நாகை மாவட்ட நிா்வாகி பூபாலன், மணிகண்டன், சதீஷ் ஆகிய நால்வரையும் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், இந்த கடத்தல் வழக்கில் தொடா்புடைய , ராஜ்குமாா் என்பவரை அக்டோபா் 23-ஆம் தேதி, திருச்சியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி குறிப்பாணை அனுப்பப்பட்டது.

அக்டோபா் 23-ஆம் தேதி ராஜ்குமாா் விசாரணைக்கு ஆஜரானாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருள் கடத்தலில் அவருக்கு தொடா்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், ராஜ்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாகை குற்றவியல் நீதித்துறை நடுவா் முன்பு ஆஜா் செய்யப்பட்ட ராஜ்குமாரை, நவம்பா் 16-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, ராஜ்குமாா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.