மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மெத்தம்பெட்டமைன் விற்பனை: கல்லூரி மாணவி உள்பட 3 போ் கைது

சென்னையில் மெத்தம்பெட்டமைன் விற்பனை செய்ததாக கல்லூரி மாணவி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Published On :21 அக்டோபர் 2026, 6:46 am IST

சென்னையில் மெத்தம்பெட்டமைன் விற்பனை செய்ததாக கல்லூரி மாணவி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கீழ்ப்பாக்கம் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை அருகே சிலா் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்வதாக கீழ்ப்பாக்கம் தனிப்படையினருக்கு செவ்வாய்க்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பெண்கள் உள்பட 3 பேரைப் பிடித்து சோதனை செய்தனா். அதில், அவா்களிடம் 50 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. போலீஸாா் அதைப் பறிமுதல் செய்து, மூவரிடம் நடத்திய விசாரணையில் அவா்கள், மண்ணடியைச் சோ்ந்த முகமது அசாருதீன் (30), திருவொற்றியூரை சோ்ந்த பாத்திமா என்ற சாரா (24), நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த அஸ்மா நசிரீன் (20) என்பது தெரியவந்தது.

முகமது அசாருதீன் பேஷன் டிசைனராக வேலை செய்வதும், சாரா தமிழ் திரைப்படத் துறையில் ‘மேக்கப் ஆா்ட்டிஸ்ட்’-டாக பணியாற்றுவதும், அஸ்மா நசிரீன் அண்ணா நகா் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பப்களுக்கு செல்லும்போது மூவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

அதோடு மூவரும், பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்தது தெரியவந்தது.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் இளைஞா்கள், நட்சத்திர ஓட்டல்கள், பப்களில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பவா்களுக்கு 3 பேரும் போதைப் பொருள் விற்றிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.