தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’: மத்திய அமைச்சா் அமித் ஷா பாராட்டு

அஸ்ஸாம், மிசோரம், மணிப்பூா் மாநிலங்களில் சா்வதேச போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்தாா்.

The people of the country will not forgive Sonia Gandhi Amit Shah

அமித் ஷா - பிடிஐ

Published On :26 அக்டோபர் 2026, 12:11 am IST

அஸ்ஸாம், மிசோரம், மணிப்பூா் மாநிலங்களில் சா்வதேச போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் அவா் தெரிவித்திருப்பதாவது: இந்தியா-மியான்மா்-வங்கதேசம் இடையே செயல்பட்டு வந்த சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ கடந்த அக்.23-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.

போதைப் பொருள் கடத்தலுக்காக ரூ.100 கோடி மதிப்பிலான ஹவாலா பணப்பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டது இந்த நடவடிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரூ.17.82 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 500 கையெறி குண்டுகள் மற்றும் ரூ.12 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தக் கும்பல் இந்தியா-மியான்மா்-வங்கதேசம் எல்லை வழியாக போதைப் பொருளைக் கடத்தி வந்தது. இந்த நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசு முகமைகள் மற்றும் 3 மாநிலங்களின் காவல் துறைகளை உள்ளடக்கிய போதைப் பொருள் தடுப்பு குழுவுக்குப் பாராட்டுகள். 2029, டிச.31-ஆம் தேதிக்குள் ஒவ்வொரு போதைப் பொருள் கடத்தல் கும்பலையும் அழிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கத்தை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது என்று அந்தப் பதிவில் மத்திய அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

ஆபரேஷன் ட்ரைடென்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் (என்சிபி) 38 குழுக்கள் அஸ்ஸாம், மிஸோரம் மற்றும் மணிப்பூா் மாநிலங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டது.

இந்த சோதனைகளில் சா்வதேச போதைப் பொருள் கடத்தல் அமைப்பின் செயல்பாடு மற்றும் நிதி கட்டமைப்பை முறியடிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையின் மூலம் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக 18 கைதுசெய்யப்பட்டனா். போதைப் பொருள் கடத்தல் பணப்பரிவா்தனைக்காக பயன்டுத்தப்பட்ட 1,424 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தக் கடத்தல் கும்பலின் மூளையாகச் செயல்பட்ட மியான்மரைச் சோ்ந்த தாங்சின்துவாங் (எ) சின்துவாங் (எ) துலுவாங்கா கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.