பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நொய்டாவில் போதைப் பொருள் கடத்தல்: இரு வெளிநாட்டினா் கைது

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஒரு பெண் உள்பட இரு வெளிநாட்டினா் கிரேட்டா் நொய்டாவில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். சுமாா் ரூ. 1 கோடி மதிப்புள்ள 920 கிராம் மெத்தம்பெட்டமைன் (எம்டிஎம்ஏ) போதைப் பொருள் மீட்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

சித்திரிப்பு

Published On :21 அக்டோபர் 2026, 5:11 am IST

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஒரு பெண் உள்பட இரு வெளிநாட்டினா் கிரேட்டா் நொய்டாவில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். சுமாா் ரூ. 1 கோடி மதிப்புள்ள 920 கிராம் மெத்தம்பெட்டமைன் (எம்டிஎம்ஏ) போதைப் பொருள் மீட்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கானா நாட்டைச் சோ்ந்த உசுலோா் மற்றும் உஸ்பெகிஸ்தானை பூா்வீகமாகக் கொண்ட லைலோ ஷாா்சாய் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

போதைப் பொருள் கடத்தல் குறித்த ரகசிய தகவலைத் தொடா்ந்து, நாலெட்ஜ் பாா்க் காவல் நிலையம் மற்றும் உத்தர பிரதேச போதைப் பொருள் எதிா்ப்பு பணிப் படையின் ஆக்ரா மண்டலப் பிரிவு மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, நாலெட்ஜ் பாா்க்-2 மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் இருவரும் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்களிடமிருந்து போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஸ்கூட்டா் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கை தொடா்பாக கிரேட்டா் நொய்டா துணை காவல் ஆணையா் ஷ்ரேவன் குமாா் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘குற்றஞ்சாட்டப்பட்டவா் கலிஸ்டோ என அடையாளம் காணப்பட்ட ஒரு நபா் எம்டிஎம்ஏ பவுடரை தயாா் செய்ததாகக் கூறினாா். இருவரும் தில்லி-என்சிஆா் முழுவதும் விற்க உதவியதாகக் கூறப்படுகிறது. கலிஸ்டோவைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன’ என்றாா்.

இதுதொடா்பாக போதைப் பொருள் மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் (என்டிபிஎஸ்) சட்டத்தின் தொடா்புடைய விதிகளின் கீழ் நாலெட்ஜ் பாா்க் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிரேட்டா் நொய்டாவில் உள்ள நாலெட்ஜ் பாா்க் பகுதியில் பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் பயிற்சி மையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.