மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எஸ்பிஐ வங்கியின் 3.75 லட்சம் தரவுகள் திருட்டு! ‘டார்க் வெப்’பில் வெளியீடு!

எஸ்பிஐ வங்கியின் 3.75 லட்சம் தரவுகள் திருடப்பட்டது பற்றி...

SBI

எஸ்பிஐ - கோப்புப்படம்

Published On :21 அக்டோபர் 2026, 11:40 am IST

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மீது இணையவழித் தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத ஹேக்கர் குழு, 3.75 லட்சம் தரவுகளை திருடப்பட்டு ’டார்க் வெப்’பில் வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலை உறுதி செய்துள்ள எஸ்பிஐ, இதன்விளைவாக வாடிக்கையாளர்களின் அன்றாட சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று விளக்கம் அளித்துள்ளது.

'சிரியூசிம்' என்ற பெயரில் செயல்படும் அடையாளம் தெரியாத ஹேக்கர் குழு ஒன்று, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள், கடன் விண்ணப்பங்கள் மற்றும் கணக்குத் தொடக்க ஆவணங்கள் உள்ளிட்ட ரகசிய தகவல்களை திருடியுள்ளதாக டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளது.

சைபர் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடும் சைபர்பல்ஸ் தெரிவித்திருப்பதாவது, எஸ்பிஐ-யின் சுமார் 3.80 லட்சம் தரவுப் பதிவுகளை சிஎஸ்வி (CSV) வடிவத்திலும், 2,722 தரவுகளை பிடிஎஃப் (PDF) வடிவத்திலும் அந்தக் குழு திருடியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை உறுதி செய்துள்ள எஸ்பிஐ நிர்வாகம், பங்குச்சந்தைக்கு அளித்திருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”கடந்த 16 அக்டோபர் 2026 அன்று, வங்கியின் வாடிக்கையாளர் தரவுகள் டார்க் வெப்பில் கசிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவது தொடர்பான எச்சரிக்கை தகவலை புலனாய்வு சேவை வழங்குநரான பாதுகாப்பு சைபர் ஏஜென்சி மற்றும் இந்திய கணினி அவசரகால கட்டுப்பாட்டுக் குழு ஆகியவற்றிடமிருந்து கிடைத்தது

டார்க் வெப்பில் கிடைக்கக்கூடிய எஸ்பிஐ தொடர்பான சுமார் 3,75,000 தரவுகளை முதல்கட்டமாக பகுப்பாய்வு செய்ததில், 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டன. கசிந்த தகவல்களில் வாடிக்கையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட கைபேசி எண்கள், பிறந்த தேதிகள், பெயர்கள், பாலினம், மின்னஞ்சல் முகவரிகள், வசிப்பிட முகவரிகள், கிளை, கடன் விண்ணப்பங்கள் உள்ளிட்டவை இருக்கின்றது.

கசிந்த தரவுகளின் நம்பகத்தன்மை மற்றும் முழுமையை உறுதிப்படுத்தவும், கசிவின் அளவைத் தீர்மானிக்கவும், வாடிக்கையாளர்களுக்கும் வங்கிக்கும் ஏற்படக்கூடிய தொடர்புடைய அபாயங்களை மதிப்பிடவும் ஒரு விரிவான விசாரணை தேவைப்பட்டது.

உடனடியாக சைபர் தடுப்பு நெறிமுறைகளை வங்கி செயல்படுத்தியது. மேலும், தரவுகள் சமரசத்தின் தன்மை மற்றும் அளவை விரிவாக மதிப்பீடு செய்து விசாரிக்க, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தை விசாரணைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த சைபர் தாக்குதலால், வங்கியின் முக்கிய வணிகச் செயல்பாடுகள், நிதி செயல்திறன் அல்லது வணிகத் தொடர்ச்சி ஆகியவற்றில் எந்தவொரு குறிப்பிடத்தக்க பாதிப்பும் ஏற்படாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வங்கியின் முக்கிய வணிகச் செயல்பாடுகள் எந்தவித இடையூறும் இன்றி இயல்பாகத் தொடர்ந்து இயங்கி வருகின்றன. ஒரு விரிவான மதிப்பீடு தற்போது நடைபெற்று வருகிறது, மேலும் தேவைக்கேற்ப பொருத்தமான தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். தேவைக்கேற்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

Story image

Summary

3.75 lakh data of SBI Bank stolen - Published on the dark web

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.