மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: அக். 21 நிலவரம்!

ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ரூ.800 குறைந்துள்ளது தொடர்பாக...

Gold price

தங்கம் விலை - கோப்புப்படம்

Published On :21 அக்டோபர் 2026, 10:39 am IST

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ரூ.800 குறைந்து, ரூ.1,07,120-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை சென்ற வாரம் தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது. கடந்த அக்.12-இல் சவரன் ரூ. 1,280, அக்.13-இல் சவரன் ரூ. 280, அக்.14-இல் ரூ. 760 குறைந்து ரூ.1,08,7200-க்கும் விற்பனையானது.

கடந்த வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 600 குறைந்து ரூ. 1,08,120-க்கும், வெள்ளிக்கிழமை விலை மாற்றமின்றி விற்பனையானது. சனிக்கிழமை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து, ரூ. 13,535-க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, ரூ. 1,08,280-க்கு விற்பனையானது.

பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த சூழலில் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை(அக்.20) பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ. 1,07,920-க்கும் கிராமுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 13,490-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ரூ.13,390-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.1,07,120-க்கு விற்பனையானகிறது.

சா்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவுக்கு, அமெரிக்க டாலா் மதிப்பு கடந்த 18 மாதங்களாக உச்சத்தில் இருப்பது முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. தவிர, அமெரிக்க கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 5.27 சதவீதமாக உயா்ந்திருப்பதும் காரணம்.

கடன் பத்திரங்கள் மூலம் வட்டி அதிகம் தரும் கிடைப்பதால், முதலீட்டாளா்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆா்வம் காட்டவில்லை. மேலும், அமெரிக்க பணவீக்க தரவு மீதான எதிா்பாா்ப்பு மற்றும் உச்ச விலையில் நடக்கும் பிராஃபிட் புக்கிங் ஆகியவையும் தங்கம் விலை தொடா்ந்து குறைய காரணம் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

எனினும், கடந்த ஐந்து நாள்களாக விலை மாற்றமின்றி விற்பனையாகி வந்த வெள்ளி விலையில் புதன்கிழமை குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.230-க்கும், கிலோ (கட்டி வெள்ளி) ரூ.10 ஆயிரம் குறைந்து ரூ.2.30 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Gold prices continue to fall: Oct. 21 situation!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.