தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வாடிக்கையாளர்களின் வங்கி இருப்புத்தொகை பாதுகாப்பாக உள்ளது: எஸ்பிஐ விளக்கம்

வாடிக்கையாளர்களின் வங்கி இருப்புத்தொகைகள் பாதுகாப்பாக உள்ளதாக எஸ்பிஐ வங்கி விளக்கியுள்ளது குறித்து...

SBI RECRUITMENT OF SPECIALIST CADRE OFFICERS ON CONTRACT, REGULAR BASIS

எஸ்பிஐ - கோப்புப்படம்

Published On :21 அக்டோபர் 2026, 6:26 pm IST

வாடிக்கையாளர்களின் வங்கி இருப்புத்தொகைகள் பாதுகாப்பாக உள்ளதாக எஸ்பிஐ வங்கி புதன்கிழமை (அக். 21) விளக்கம் அளித்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மீது இணையவழித் தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத ஹேக்கர் குழு, 3.75 லட்சம் தரவுகளை திருடி ’டார்க் வெப்’பில் வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் எஸ்பிஐ தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து எஸ்பிஐ அளித்த விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

சமீபத்தில் நடந்த தரவுக் கசிவு, மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை மட்டுமே பாதித்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இது வங்கியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய வணிகச் செயல்பாடுகள், நிதிச் செயல்திறன் அல்லது வணிகத் தொடர்ச்சி ஆகியவற்றில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.

வாடிக்கையாளர்களின் இருப்புத்தொகைகள் பாதுகாப்பாக உள்ளன. மேலும், எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க எங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

எங்கள் வாடிக்கையாளர்களின் சொத்துகள், தரவுகள் ஆகியவற்றின் பாதுகாப்பும் எங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் எங்களுக்கு மிக முக்கியம். அவை எங்களது முதன்மையான முன்னுரிமைகளாகத் தொடர்கின்றன என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்பிஐ விளக்கம்

எஸ்பிஐ விளக்கம் - படம் - எக்ஸ்

Summary

SBI Bank clarified on Wednesday (Oct. 21) that customers' bank balances are safe.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.